கன்னியாகுமரியில் சார்பு ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து பெரிய அளவில் தமிழகத்தில் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும்  தமிழக உளவுத்துறை கண்காணித்து இதனை தடுக்க வேண்டும் எனவும்   இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.   நேற்று   திண்டுக்கல்லில் நடந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினார் ,  இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.   அதில் ,  கடந்த காலங்களிலே கோவை சிறை ஜெயிலர் பூபாலன், மதுரை சிறை வார்டன் ஜெயப்பிரகாஷ், கோவை  சப்-இன்ஸ்பெக்டர் முரளி மீது வெடிகுண்டு வீசப்பட்டது.  

புழல் சிறையில் ஜெயில் வார்டன் வெட்டப்பட்டார் . இப்படி பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு தமிழ்நாட்டில் ஒரு பெரிய கலவரத்தை உருவாக்க  ஒரு  அமைப்பு பயிற்சி எடுத்து அதை செயல்படுத்தி வருகிறது .  கன்னியாகுமரி சார்பதிவாளர் வில்சன் சுட்டு கொல்லப்பட்டது இதன் தொடர்ச்சியாகும்.  மத்திய புலனாய்வு அமைப்பு தமிழகத்தில்  சில பயங்கரவாதிகளை கைது செய்திருக்கிறார்கள்.  ஆனால்  தமிழகத்தில் இருக்கக்கூடிய உளவுத்துறை இன்னமும் விழித்துக் கொள்ளவில்லை.  இந்த பயங்கரவாத சம்பவம் இன்னும் கலவரமாக மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது.  கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட பகுதிகளில்  பங்களாதேசத்தை சேர்ந்த தீவிரவாதிகள் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றனர்  என்ற ஒரு தகவல் தற்பொழுது  வந்து கொண்டிருக்கின்றது. 

எப்பொழுது திமுக பலமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் இது போன்ற தீவிரவாத செயல்கள் தலைதூக்கும் இந்து முஸ்லிம்களை தூண்டி  விடுவதை திமுக  செய்து வந்தது.  அந்த வேலையை இப்போது  ஸ்டாலின் செய்து வருகிறார். திருமாவளவன், திருமுருகன், காந்தி ,வைகோ, சீமான் இவர்கள் அனைவரும் ஒரே மன நிலையை கொண்டவர்கள்.   போலீசாரின் மனோபாவத்தை  குறைக்க வேண்டும். அவர்களை விரக்தி அடைய செய்ய வேண்டும் என்று பயங்கரவாதிகள்   திட்டமிட்டிருக்கிறார்கள்.  இதை சரியாக கவனிக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் ஒரு பெரிய கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் தமிழக உளவுத்துறை கண்காணித்து தடுக்க வேண்டும்  என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது இவ்வாறு அவர் பேசினார்.