18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு, ஊழல் குற்றச்சாட்டுக்கள் என விழி பிதுங்கி நிற்கும் எடப்பாடி பழனிசாமி அரசு திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கை, தொடர்ந்து நடத்த, முடிவு செய்துள்ளது. . இந்த வழக்கு தொடரும் பட்சத்தில், தீர்ப்பு வரும் வரை, அத்தொகுதியில், இடைத்தேர்தல் நடத்துவதற்கு, தடை கேட்கவும், ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால் இதை தடுக்க, தி.மு.க., வும், இவ்வழக்கில் மூக்கை நுழைக்கிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு மதுரைமாவட்டம், திருப்பரங்குன்றம்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ்.எம்.சீனிவேல், பதவி ஏற்காமலேயே மரணமடைந்தார். அப்போது அந்த தொகுதிக்கு நடந்தஇடைத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், ஏ.கே.போஸ்; தி.மு.க., சார்பில், டாக்டர்சரவணன்ஆகியோர் போட்டியிட்டனர். இதில், போஸ்வெற்றிபெற்றார். தேர்தல்மனுதாக்கல்நேரத்தில், ஜெயலலிதா, உடல்நலம்பாதிக்கப்பட்டிருந்தார்.

அதனால், ஏ.கே.போசுக்கு, இரட்டைஇலைசின்னம்ஒதுக்ககோரும்படிவத்தில், அவரால்கையெழுத்திடமுடியவில்லை. எனவே, ஜெயலலிதாவின்கைரேகைபெறப்பட்டது. அதில், தேர்தல்விதிமீறல்நடைபெற்றதாக, டாக்டர்சரவணன், சென்னைஉயர்நீதிமன்றத்தில்வழக்குதொடர்ந்தார்.

இந்தவழக்கு, இரண்டுஆண்டுகளாகநடந்துவருகின்றன. இந்நிலையில்கடந்த மாதம் 20 ஏ.கே.போஸ்மரணம்அடைந்தார். அதனால், 'போசுக்குபதிலாக, இந்தவழக்கைதொடர்ந்துநடத்தவிருப்பம்உள்ளவர்கள், 14 நாட்களுக்குள்மனுதாக்கல்செய்யலாம்' என, சென்னைஉயர்நீதிமன்றம், 10ம்தேதிஉத்தரவிட்டுள்ளது.இந்நிலையில்இவ்வழக்கு, நாளைதிங்கட்கிழமை மீண்டும்விசாரணைக்குவருகிறது.
கடந்தமுறை, திமுகவேட்பாளர்சரவணன்தோல்விக்கு, ஆளுங்கட்சியின்பணபலம்தான்காரணம். தற்போது, எந்ததேதியில்இடைத்தேர்தல்வந்தாலும், தி.மு.க., வேட்பாளராக, சரவணனைமீண்டும்நிறுத்த, கட்சிமேலிடம்முடிவுசெய்துள்ளது. சென்னை, ஆர்.கே. நகரைகோட்டைவிட்டதுபோல, இந்ததொகுதியைவிடாமல்கைப்பற்ற, கட்சிமேலிடம், தேர்தல்செலவைஏற்கமுன்வந்துள்ளது.

ஆனால் போஸ்வழக்கைநடத்துவதன்மூலம், ஜெயலலிதாகைரேகைஉண்மையானதுஎன்பதை, நீதிமன்றத்தில்நிரூபிக்க, அ.தி.மு.க., விரும்புகிறது. எனவே, அ.தி.மு.க., தரப்பில், இவ்வழக்கில், இருமனுக்கள்தாக்கல்செய்யப்படஉள்ளன.
மனுஏற்கப்பட்டு, விசாரணைதொடருமானால், திருப்பரங்குன்றம்இடைத்தேர்தல்கேள்விக்குறியாகிவிடும். மேலும் இவ்வழக்கில்முடிவுதெரியும்வரை, இந்ததொகுதியில்இடைத்தேர்தல்நடத்தக்கூடாதுஎன, அ.தி.மு.க., தரப்பில், தடையுத்தரவுபெறதிட்டமிடப்பட்டுள்ளது.
இதனை மோப்பம் பிடித்து தடுக்க, சட்டரீதியாக, என்னநடவடிக்கைஎடுக்கலாம்என்பதுகுறித்து, தி.மு.க., தீவிரமாகஆலோசித்துவருகிறது. அதன்படி, போஸ்வழக்கில், தி.மு.க., தரப்பிலும், ஒருமனுதாக்கல்செய்யப்படஉள்ளது.கைரேகைவழக்கில்முடிவுதெரியும்வரை, திருப்பரங்குன்றம்தொகுதிக்குஇடைத்தேர்தல்நடத்த, எக்காரணத்தைகொண்டும், தடைவிதிக்ககூடாதுஎன, உயர்நீதிமன்றத்தைநாடஉள்ளது. தொடர்ந்து பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் எடப்பாடி பழனிசாமி, இந்த நேரத்தில் எதற்கு இடைத் தேர்தல் என்றே நினைக்கிறாராம்.
