baba ramdev going to london for knee treatment
யோகா குருவான பாபா ராம்தேவ் தனது மூட்டு அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றதாக வெளியான செய்திதான் டிவிட்டரின் ஹாட் டாப்பிக். கேன்சரைக்கூட யோகா மூலம் குணப்படுத்தலாம் எனக் கூறும் பாபா ராம்தேவ்தான் தற்போது சமூக வலைதளங்களில் மக்களின் நகைச்சுவைப் பொருளாக மாறியுள்ளார்
"பாபா ராம்தேவ் தனது மூட்டு அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளதால் பக்தர்கள் சற்று ஓய்வெடுங்கள். நவீன மருத்துவம் மூலம் அவர் குணமடைந்து, மீண்டும் வந்து யோகா மூலம் சொல்லிக் கொடுப்பார்."

"பதஞ்சலி சூரணங்கள், லேகியங்கள் மூலம் உங்கள் மூட்டு வலியை குணப்படுத்த முடியவில்லையா”
"எனது பக்கவாத நோயைக்கூட யோகாவால் குணப்படுத்தினேன் என்று கூறிய ஒரு மனிதர் தற்போது மூட்டு அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார். எதில் தவறு நடந்தது பாபாஜி? உங்கள் யோகாவிலா, அல்லது சூரணங்களிலா?" என்று டிவிட்டரில் பலர் தங்களது கருத்துக்களை கிண்டலாகப் பதிவு செய்துவருகின்றனர்.
.jpeg)
பாபா ராம்தேவின் பதஞ்சலி யோக பீடம் இதனை மறுத்துள்ளது. பாபா ராம்தேவ் தற்போது நலமாக இருக்கிறார், அவருக்கு மூட்டு அறுவை சிகிச்சை என்பது ஒரு பொய்யான செய்தி என யோக பீடம் கூறியுள்ளது.
