அழகிரியின் மெரினா பேட்டி ஏற்கனவே கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது கோபாலபுரத்தில் ஆக்ரோஷமாக பேட்டியளித்த அழகிரி தற்போது நடக்கும் செயற்குழுவை வேடிக்கைப் பார்ப்பது,  இன்று நடக்கும் செயற்குழு கூட்ட முடிவுக்காக அவர் காத்திருப்பதை வெளிக்காட்டுவதாக உள்ளது.

கலைஞர் அரங்கம் கண்ணீர் அரங்கமாக திமுக தலைவரின் மறைவுக்குப் பிறகான கட்சியின் முதல் செயற்குழுக் கூட்டம் இன்று   சற்று நேரத்திற்கு முன்பாக கூடியது. 

திமுக எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் சிறப்பு அழைப்பாளர்களாக வந்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்தபின் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள்குறித்து செயற்குழுவில்  எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட துணைச் செயலாளர்கள், கட்சியின் 19 அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள் என்று சுமார் ஆயிரம் பேரைத் தாண்டியுள்ளது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்தால் தலைமை கழகம் களைகட்டியுள்ளது.

கருணாநிதி மறைவுக்கு பிறகு கட்சியில் தனக்கு முக்கிய பொறுப்பு வேண்டும் என  எதிர்பார்த்தார் அழகிரி. ஆனால் அதற்கு கட்சியின் செயல்தலைவரான ஸ்டாலின் இதுவரை  எந்த ரியாக்ஷனும் செய்யவில்லை. இன்று  திமுகவின் அவசர செயற்குழு கூட இருந்த நிலையில். நேற்று கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அழகிரி, திமுகவின் உண்மையான தொண்டர்களும் விசுவாசிகளும் எனக்குதான் ஆதரவாக உள்ளனர் என கெத்தாக பேட்டியளித்தார். மேலும்  தனது ஆதங்கத்தை இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.

அழகிரியின் மெரினா பேட்டி ஏற்கனவே கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது கோபாலபுரத்தில் ஆக்ரோஷமாக பேட்டியளித்த அழகிரி வேடிக்கைப் பார்ப்பது,  இன்று நடக்கும் செயற்குழு கூட்ட முடிவுக்காக அவர் காத்திருப்பதை வெளிக்காட்டுவதாக உள்ளது.

கட்சி பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாய் உயர்ந்து இன்றைக்கும் திமுகவை தன் உழைப்பால் காத்துக்கொண்டிருக்கும் தளபதியைத்தான் கலைஞர் இல்லாத இந்த நேரத்தில் தொண்டர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.. அந்த அசைக்கமுடியாத நம்பிக்கையை யாரும் அசைத்திடவே முடியாது என திமுக நிர்வாகிகள் காட்டுவார்கள் தலைவரின் விசுவாசிகள் தளபதியின் பக்கம் தான் என காட்டும் செயற்குழு தான் இது என திமுக தொண்டர்கள் கூறி வருகிறார்கள்.