இன்று மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் சென்னையில் அமைதி பேரணி நடத்தி உள்ளார். மெரினாவில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியில் பேரணி முடிந்துள்ளது.

ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கப்பட்ட இந்த அமைதிப் பேரணிக்கு சுமார் ஒரு லட்சம்பேர திரளுவார்கள் என நம்பிக்கொண்டிருந்த அழகிரிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பேரணி தொடங்கிய நேரத்திலிருந்தே டென்ஷனாகவே காணப்பட்டார். ஆமாம் பேரணி தொடங்கும் நேரம் வரை அதிகமாக கூட்டம்  வரும் நம்பிக்கையாக காத்துக் கொண்டிருந்தார். ஆனால் எதிர் பார்த்த அளவிற்கு கூட்டம் வரவில்லை, இதனால் இன்று காலை 10 மணி அளவில் பேரணி நடத்த திட்டமிட்டு, 11.30க்கு பேரணி தொடங்கியது.  

சுமார் ஒரு  லட்சத்திற்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்துகொள்வார்கள் என்று அழகிரி  கூறியிருந்தார்.  இதனால் 3 துணை ஆணையர்கள் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.  

இந்தப்  அழைத்துவரட்டவர்கள் அனைவருமே அழகிரியின் விசுவாசிகள். வந்தவர்களுக்கு ஒரே நிற டீ சர்ட் மட்டுமே அணிந்து இருக்கிறார்கள். எல்லோருக்கும் கருப்பு நிற டீ சர்ட் வாங்கி தரப்பட்டுள்ளது.  இந்த டீ ஷர்ட்டில்  அழகிரி புகைப்படம், சிறிதாக கருணாநிதி புகைப்படம் உள்ளது. பின்பக்கம் தயாநிதி அழகிரி  படம் உள்ளது.  ஆனால் திமுகவின் பெரும் தலைகலான அறிஞர் அண்ணா, பெரியார் புகைப்படம் கூட இல்லை. 

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியை நோக்கி மு.க அழகிரி தலைமையில் இன்று அமைதி பேரணி நடத்தப்பட உள்ளது. இன்று காலை 11 மணி அளவில்  தொடங்கிய இந்த அமைதி பேரணி உண்மையில் அத்தனை அமைதி பேரணி இல்லை,  ஆமாம், அஞ்சலி செலுத்தும் அமைதி பேரணி என சொல்லிவிட்டு பறை இசை கலைஞர், பேண்ட் வாத்தியக்காரர்கள் இந்த அமைதிப் பேரணியை  அதிரவைத்தனர்.

பேரணியை தொலைகாட்சிகளில் லைவ் டெலிகாஸ்ட் செய்ய முயற்சி செய்து வந்த அழகிரி கனவில் மண்ணை போட்டுவிட்டது ஐடி ரெய்டு. இதனால் கடும் கடுப்பில் இருந்த அழகிரி கூட்டத்தில், நெரிசலில் அழகிரியை மீது வேகமாக பின்னே தள்ளியதால் டென்ஷனான அழகிரி தொண்டர் ஒருவரின் கன்னத்தில் பளார் எகிறி பளார் விட்டார். கூடவே வந்திருந்த ஏஜி சம்பத் அழகிரியை சமாதனபடுத்தி அழைத்து சென்றார். இதனால் ஆகு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் பார்ப்பபர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.