மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு  செப்டம்பர் 5ம் தேதி சென்னையில் அமைதி பேரணி நடத்தப்போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அறிவித்து உள்ளார். அதனை தொடர்ந்து மதுரை சத்ய சாயி நகரில் உள்ள அழகிரியின் இல்லம் முன்பாக அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் அழகிரி ஈடுபட உள்ளார். 

அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி  இந்த ஆலோசனை கூட்டத்தில் மு.க அழகிரி அவர் தலைமையில்  நடந்த கூட்டத்தில் மதுரை,நெல்லை, விருதுநகர், சிவகெங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த அழகிரியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டார்கள்.

 திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி இடையே உண்மையான தொண்டர்கள் ஆதரவு யாருக்கு? மேலும் கட்சியில் அதிகாரம் யாருக்கு என்பதிலும், பகிரங்கமாக மோதல் வெடித்துள்ளது. இதனையடுத்து, செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப்பேரணி நடத்தி தனது பலத்தை நிரூபிப்பேன் என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். 

இந்தப் பேரணி, திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் இருந்து துவங்க சென்னை காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும்   கருணாநிதியின் மறைவை அடுத்து திமுக தலைவராக பதவி ஏற்கவுள்ள ஸ்டாலினுக்கு  திமுக பொதுக்குழுவில்  எதிராக போர்க்குரல் எழுப்ப திமுகவில் ஒரு தரப்பினர் திட்டம்  போட்டுள்ளார்களாம். அதேபோல சில  மாவட்ட செயலாளருக்கு   எதிராக உள்ள சிலரும் போர்க்குரல் எழுப்ப உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், மதுரை டிவிஎஸ் நகரில் அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அமைதிப்பேரணிக்கு ஆள் திரட்டுவது குறித்தும், திமுக பொதுக்குழுவில் ஸ்டாலினுக்கு எதிராக போர்க்குரல் எழுப்புவது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தில் அழகிரியின் ஆதரவாளர்கள், திமுக அதிருப்தியாளர்கள் திரளாக பங்கேற்றுள்ளனர்! அடுத்து நடக்கபோவது குறித்து திமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது.

மதுரையில் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வரும் அழகிரியின் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பலர் வந்து குவிந்தவண்ணம் உள்ளனர். இந்த அவசர கூட்டம் எதற்கு"என்று செய்தியாளர்கள் அழகிரியிடம் கேட்டபோது "கட்சியினருடன் ஆலோசனைசெய்ய  இருக்கிறோம் உங்களுக்கான தீனி வரும் செப்டம்பர் 5 க்கு பின்னால் கிடைக்கும் என்று பதில் அளித்துள்ளார்.