மதுரை தி.மு.க தொண்டர்கள் மத்தியில் கூட தனக்கு ஆதரவு இல்லை என்பதை தெரிந்து மு.க.அழகிரி மனம் நொந்து போய்விட்டது அவரது அடுத்தடுத்து நடவடிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.  

கலைஞரின் 16ம் நாள் காரியத்தை முடித்துவிட்டு மதுரை சென்று செப்டம்பர் 5 பேரணிக்கான வேலைகனை ஜரூராக 
செய்ய வேண்டும் என்பது தான் அழகிரியின் எண்ணமாக இருந்தது. இதற்காக 15ம் நாள் காரியம் முடிந்த கையோடு சென்னை விமானநிலையத்தில் இருந்து  மதுரைக்கு பறந்தார் அழகிரி. 

ஆனால் அழகிரி விமான நிலையத்தை விட்டு வெளியே வரும் போது மொத்தமாகவே 15 பேர் மட்டுமே வரவேற்க காத்திருந்தனர்.
கலைஞர் மறைவை தொடர்ந்து தன்னை வரவேற்க தி.மு.க தொண்டர்கள் நிச்சயமாக விமான நிலையத்திற்கு கணிசமான அளவில் வருவார்கள் என்று அழகிரி எதிர்பார்த்திருந்தார். மேலும் யாரையும் காசு கொடுத்து கூட்டி வரவேண்டாம் என்றும் அழகிரி உத்தரவிட்டிருந்தார். 

ஆனால் அழகிரியின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில்  மன்னர், கோபி மற்றும் இசக்கி முத்து ஆகியோர் மட்டுமே விமான நிலையத்தில் அழகிரியுடன் இருந்தனர். இதனால் அப்ஷெட்டான நிலையில் வீட்டுக்கு சென்ற  அழகிரி அங்கு சென்றதும் மன்னன் மற்றும் கோபியுடன் நீண்ட நேரம் தனியாக பேசியுள்ளார். மதுரையில் தற்போதைய நிலை என்ன? தி.மு.க தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள்? நாம் அழைத்தால் வருவார்களா? மாட்டார்களா? என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுள்ளார். 

அதற்கு மன்னனோ இன்னும் பத்து நாள் இருக்குன்னே அதுக்குள்ள நாம ஏற்பாடு பண்ணிடலாம்னு சொல்லியிருக்கார்.

 ஆனால் கோபி தான் கள நிலவரத்தை உடைத்து அழகிரியிடம் சொல்லியுள்ளார். சுவர் விளம்பரம் எழுதனும்னு ஒரு ரெண்டு பேர கூட போங்கடானு சொன்னா  கூட ஏதாவது காரணம் சொல்லிவிட்டு ஓடிரானுங்கனே, சொன்னா வெட்கம் இதுவரை மதுரையில் இரண்டு இடத்துல தான் சுவர் விளம்பரம் எழுத முடிஞ்சது.  எந்த விளம்பரத்துலயும் எங்க பேர போட்டுடாதீங்கனு வீடு தேடி வந்து சொல்லிட்டு போரானுங்கனேன்னு கோபி சொல்ல, அழகிரி சோகமாக முகத்தை தொங்க போட்டுக் கொண்டதாக சொல்கிறார்கள். 

தி.மு.கவில் இருந்து நீக்கிய பிறகு திருமணம், காதுகுத்து, கருமாதினு நாம எதுக்கும் போகாம விட்டது தான் தப்பு. இப்ப எப்படி விட்டத பிடிக்குறதுனு தெரியலன்னு சொல்லிட்டு அழகிரி படுக்க போய்ட்டாரு. 

மறுநாள் காலையிலும் மன்னன் மற்றும கோபி சீக்கிரமே அழகிரி வீட்டுக்கு வந்துட்டாங்க. அங்க இருந்து 
திருச்சுழில ஒரு கல்யான வீட்டுக்கு அழகிரி புறப்பட்டு சென்றார். அங்கும் அழகிரிக்கு போதிய வரவேற்பு இல்லை. மதுரையில் தான் வீட்டில் இருப்பது தெரிஞ்சும் யாரும் தன்னை பார்க்க வரலங்றது தான் அழகிரி அப்செட்டாக முக்கிய காரணம்னு சொல்றங்க. 

அதுமட்டும் இல்லாமல், தற்போது பொறுப்பில் இருப்பவர்கள் தான் வருவதில்லை என்றால், பொறுப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்களும் வராம போனதற்கு என்ன  காரணம்னு அழகிரி குழப்பத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.   அழகிரியின் நடவடிக்கைகளை தெரிந்த ஒருவர் ஸ்டாலின் தரப்புடன் தொடர்பில் இருந்து  தகவல்களை பாஸ் செய்ய செய்ய அழகிரியுடன் யாரும் நெருங்கிவிடாமல் தடுப்பு போடப்படுவதாக மற்றொரு தரப்பு கூறுகிறது.