தமிழக அரசியலில் இனி கலக்கப்போவது நம்ம அஞ்சா நெஞ்சர் தான் என அதிகப்படியான எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் அழகிரியின் உடன்பிறப்புகள். அவரும் அதற்கு ஏற்ப தான் செப்டம்பர் 5 அன்று நடக்க இருக்கும் இரங்கல் ஊர்வலத்தை நடத்திட பெறுமுயற்சி செய்துவருகிறார். அழகிரிக்கு ஆதரவாக 1 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வர் என்று இப்போதே ஊடகங்கள் ஒரு பக்கம் கணித்திருக்கின்றன. அதிலும் இன்று அழகிரியின் வீட்டின் முன்னர் வைத்து நடைபெற்றிருக்கும் கூட்டம் திமுக அரசியல் கூறித்து மேலும் விறுவிறுப்பை ஏற்றி இருக்கிறது. 

பத்திரிக்கையாளர்களுக்கு சரியான தீனி செப்டம்பர் 5 ஆம் தேதி கிடைக்கும் என்றெல்லாம் அழகிரி கெத்தாக ஒருபக்கம் பேசிக்கொண்டிருந்தாலும் உள்ளூற அவருக்கு உதறல் எடுத்துக்கொண்டிருக்கிறது என சில தகவல்களுக் தற்போது வெளியாகி இருக்கின்றன. இதன்படி அழகிரி ஆரம்பித்த இந்த விஷயங்கள் எல்லாமே ஸ்டாலின் எப்படியும் தன்னை கூப்பிட்டு பேசுவார் என்ற எதிர்பார்ப்பில் தானாம். 

ஆனால் ஸ்டாலின் தரப்பில் இதுவரை எந்த அசைவும் தெரியாததால் தவித்து போயிருக்கும் அழகிரி பின்வருமாறு புலம்பி வருகிறாராம். எனக்கு கட்சியில் பெரிய பதவி தராவிட்டால் கூட பராவாயில்லை கட்சியில் சேர்த்து கொண்டால் மட்டும் போதும். நான் என்னுடைய ஆதரவை தந்துவிடுவேன் என தெரிவித்திருக்கும் அழகிரி, ஆர்.கே நகர் விஷயத்திலே கூட மத்தவங்க சொன்னத நம்பி ஸ்டாலின் ஏமாந்துட்டார்.

இனி வரபோற திருப்பரங்குன்றம் , திருவாரூர் தேர்தலிலாவது சேர்ந்து நின்று வென்றுவிடலாம் என்றும் கூறி இருக்கிறாராம். இந்த நோக்கத்தோடு தான் அவர் எல்லோரிடமும் பேசிவருகிறார் ஆனால் ஸ்டாலினின் கட்டளைப்படி யாரும் தான் அவரை கண்டுகொள்வது இல்லை என்றும் கூறப்படுகிறது தொடர்ந்து திமுகவினரை அழைத்து பேசமுயலும் அழகிரியின் போனை முன்னாள் மாவட்ட செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் என யாருமே எடுப்பதில்லையாம். 

இந்த செப்டம்பர் 5 பேரணி எல்லாம் சும்மா தான் . நான் ஸ்டாலின் கூட சேர தான் விரும்பறேன் . ஆனா அப்படி நடக்க விடாம தடுத்துக்கிட்டிருக்கிறார் ஸ்டாலின் மாப்ள சபரீசன் என தனக்கு நெருக்கமானவர்களிடம் அழகிரி புலம்பி தள்ளி இருக்கிறார்.
இதனை தொடர்ந்து ‘தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக இருக்கும் பி.டி.ஆர்.பி தியாகராஜன் சபரீசனுக்கு வேண்டியவர். அவரை வைத்து வேண்டுமானால் நாம் முயற்சி செய்து பார்க்கலாமா?  என அழகிரிக்கு ஆலோசனை வழங்கி இருக்கின்றனர் சிலர்.

ஆனால் சின்ன பசங்க கிட்ட நாம ஏன் விட்டு கொடுக்கனும் என கூறி அதை தடுத்திருக்கிறார் அழகிரிக்கு நெருக்கமானவரான இசக்கி முத்து. தொடர்ந்து கோபாலபுரத்தில் வைத்தே நீங்க ஸ்டாலின் கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கலாமே எனவுக் கேட்டிருக்கிறார் இசக்கி முத்து. 

நான் பேச தான் முயற்சி செய்தேன் ஆனால் அங்கு யாரும் என்னை கண்டுக்கவே இல்லை . ஸ்டாலின் கூட முகத்தை திருப்பிகிட்டார். என வருத்தப்பட்ட அழகிரியிடம் அப்போ காவேரில இருக்கும் போதே கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம் என வெந்த புண்ணில் வேலை பாய்ச்சி இருக்கிறார் இசக்கி . ஆமா டி.ஆர்.பாலு மேல கோவப்பட்டேன், குடும்ப விவகாரத்துல தலையிடாதீங்கன்னு சொன்னேன். ஆஸ்பிட்டல்ல என்னைப் பார்த்ததுமே மொகத்த திருப்பிகிட்டாங்க. 

என் மீது பாசமா இருந்த கனிமொழிகூட என் போன எடுக்கிறதில்ல. இப்போ என்ன தான் செய்ய என வருந்தி இருக்கிறார் அழகிரி. இப்படி அவர் வருத்தத்தில் இருப்பதால் செப்டம்பர் 5 அன்று இந்த லட்சம் பேர் கலந்து கொள்ள இருக்கும் பேரணி நடக்குமோ நடக்காதோ என குழம்பி போயிருக்கின்றனராம் அழகிரி தரப்பினர்.