செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஸ்டாலின் ஆதரவாளர்களாக இருக்கலாம் ஆனால் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் என்னால் பரிந்துரை செய்யப்பட்டு கலைஞரால் நியமிக்கப்பட்டவர்கள் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார் ஸ்டாலின்.

செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஸ்டாலின் ஆதரவாளர்களாக இருக்கலாம் ஆனால் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் என்னால் பரிந்துரை செய்யப்பட்டு கலைஞரால் நியமிக்கப்பட்டவர்கள் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார் ஸ்டாலின்.

கலைஞர் மறைந்த இரண்டே நாட்களில் செயற்குழுவை அறிவித்துள்ளார் ஸ்டாலின். கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க செயற்குழு என்று ஸ்டாலின் கூறினால், அவரை தலைவராக தேர்வு செய்யவே செயற்குழு என்று அழகிரி தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார். என்ன தான் செயற்குழுவில் ஸ்டாலினை தலைவராக தேர்வு செய்தாலும், பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும். மேலும் தலைவர் பதவிக்கு தேர்தலும் நடத்தப்பட வேண்டும். செயற்குழுவில் தற்போது இருப்பவர்கள் அனைவருமே ஸ்டாலின் ஆதரவாளர்கள்.

ஆனால் பொதுக்குழுவில் இருப்பவர்கள் அப்படி அல்ல. பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் அழகிரி தி.மு.கவில் கோலோச்சிய காலம் தொட்டே நியமிக்கப்பட்டு வருகின்றனர். மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் மட்டும் அல்லாமல் தனது ஆதரவாளர்களாக இருந்த அனைத்து மாவட்டத்தை சேர்ந்தவர்களையும் அழகிரி பொதுக்குழுவில் உறுப்பினராக்கி வைத்துள்ளார். அவர்கள் அனைவரையும் தற்போது அழகிரி தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

செயற்குழுவில் தலைவராக தேர்வு செய்யப்பட்டு பொதுக்குழுவில் அதற்கான ஒப்புதலை பெற முயற்சிக்கும் போது நான் யார் என்பதை ஸ்டாலினுக்கு காட்டுவேன் என்று அழகிரி கூறத் தொடங்கியுள்ளார். மேலும் கலைஞர் மறைவுக்கு பிறகு சென்னையிலேயே தங்கி தனது அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். தி.மு.கவில் தனது மகனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கிவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை.

மாறாக என்னையும், எனது குடும்பத்தையும் தி.மு.கவில் இருந்து ஒழித்துக்கட்ட முயற்சித்தால் என்ன செய்து வேண்டுமானலும் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுப்பேன் என்று அழகிரி கூறி வருகிறார். ஆனால் செயற்குழு மட்டும் அல்ல பொதுக்குழு உறுப்பினர்களும் கூட ஸ்டாலின் பாக்கெட்டில் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அழகிரியை போலவே ஸ்டாலின் தரப்பும் பொதுக்குழு உறுப்பினர்களை தொடர்பு கொண்டு அவர்களின் தேவையை அறிந்து வருவதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.