ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 08.00 மணிக்கு துவங்கியது.எழும்பூரிலிருந்து நாகர்கோயில், ஹௌரா விலிருந்து எர்ணாகுளம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு விஜயதசமி ஆயுத பூஜை தீபாவளி விடுமுறைகளுக்கான சிறப்பு ரயில்கள் தென்னக ரயில்வேயால் இயக்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு அனைத்து முன்பதிவு நிலையங்களிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் அக்டோபர் 23, 24, 27 தேதிகளிலும், நவம்பர் 12 மற்றும் 13 தேதிகளிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன நாகர்கோவிலில் இருந்து எழும்பூருக்கு அக்டோபர் 26, 27  தேதிகளிலும், நவம்பர் 15, 16 தேதிகளிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறைக்கான சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு மந்தமான முறையிலேயே நடைபெற்று வருவதாக முன்பதிவு நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

ஏற்கனவே தீபாவளி சிறப்பு ரயில்கள் முன்பதிவு நிறைவு பெற்று இருக்கக் கூடிய நிலையில், தற்போது மீண்டும் இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு முன்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது ரயில் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.