இதுதான் உண்மை, அடுத்த தலைமுறை இந்துக்களுக்கு தான் சிக்கல் வரும் என்று முட்டாள்தனமாக கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் உங்கள் மிச்சம் இருக்கின்ற, எச்சம் இருக்கின்ற, சொச்சம் இருக்கின்ற கலாச்சார அடையாளங்கள் அழிக்கப்படும். நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளுங்கள், நமது கலாச்சாரத்தினுடைய, நமது முன்னோர்களுடைய சாதனை, பெருமை, அந்த சாதனை, பெருமை, வாழ்க்கை முறைக்கு காரணமாக இருந்த உந்து சக்தி இந்து மதம். 

இந்துக்கள் தமிழ்நாட்டை இழந்துவிட்டார்கள் என்றும், அடுத்த தலைமுறையில் அல்ல இந்த தலைமுறையிலேயே இந்து மதம் தமிழ் நாட்டில் மொத்தமாக துடைத்தெறிய படும் என்றும் நித்யானந்தா எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

பாலியல் வழக்கில் சிக்கி சின்னாபின்னமாகி ஒரு கட்டத்தில் " நான் ஒரு பொறம்போக்கு" என தன்னைத் தானே கூறிக் கொண்ட நித்தியானந்தா, தமிழகத்தை விட்டே, அல்ல இந்தியாவை விட்டே ஓடி தலைமறைவாகியுள்ளார். தற்போது அவர் கைலாசா என்னும் நாட்டில் இருப்பதாக கூறி வருகிறார். அந்நாட்டின் அதிபரும் தான்தான் என்றும், இந்து தர்மத்தையும் இந்து மதத்தையும் காப்பதற்காக அந்த நாட்டை உருவாக்கி இருப்பதாகவும் அவர் கூறி வருகிறார். ஆனால் உண்மையில் அவர் எங்கு இருக்கிறார் என்பதை யாராலும் உறுதி செய்ய முடியவில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் புதியபுதிய கெட்டப்புகளில் தோன்றி பக்தர்களிடம் சத்சங்கம் நடத்திவருகிறார் அவர். சமீபத்தில் நவராத்திரியின்போது அவர் நடத்திய போட்டோ சூட் பேஸ்புக்கில் பகிர்ந்தார். அது சமூக வலைத்தளத்தில் வைரலானது. இப்படி ஏகப்பட்ட அலப்பறைகளை செய்துவரும் நித்தியானந்தா பேசி வெளியிட்டுவரும் வீடியோக்கள் பெரும் பேசுபொருளாக மாறிவருகிறது. பலர் அவைகளை நகைச்சுவையாக பார்த்து ரசித்திவிட்டு கடந்து செல்கின்றனர். ஆனால் இன்னும் பலர் அவர் கூறும் கருத்துக்களை ஆமோதித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. அதாவது நாட்டில் உள்ள சாதிக் கட்டமைப்பை அனைவரும் பாதுகாக்க வேண்டும், மனிதச் சமூகம் சிறப்பதற்காகவே இந்த சாதியக்கட்டமைப்பை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளனர் என்றும், அதை எவரும் சீர்குலைக்க நாம் அனுமதிக்கக்கூடாது என்றும், சாதி கட்டமைப்பு சீர்குலைந்தால் இந்து மதம் அழிந்துவிடும், எனவே இந்த சாதிக்கட்டமைப்பை ஒழிக்க (திராவிஷ) திராவிட கும்பல்கள் தொடர்ந்து பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்து மக்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும் அவர் வலியுறுத்தியிருந்தார். இது ஒருபுறம் இருக்க அவர் பேசியுள்ள மற்றொரு விஷயம் கேட்போரை அதிரவைப்பதாக இருந்தது. அதாவது சாதி கட்டமைப்பு இந்து மத த்திற்கு எவ்வளவு முக்கயமோ அதே அளவுக்கு சாதி கலப்பு இல்லாமல் இருப்பது அவசியல் என கூறியிருந்தார் அவரின் இந்த கருத்து கடுமையாக விமசிக்கப்பட்டது, அதே நேரத்தில் பலரும் அவரின் இந்த கருத்தை ஆதரித்தனர். 

இந்நிலையில் மீண்டும் ஓரு வீடியோ வெளியிட்டு அவர் அதிர்ச்சி கிளப்பியுள்ளார். அதாவது தமிழகத்தில் இந்து மதம் அழிக்கப்பட்டு வருகிறது என அவர் பகீர் கிளப்பியுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டை இந்துக்கள் இழந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை, என் வாயால் இதை சொல்லக்கூடாது என கட்டுப்படுத்திக்கொண்டிருந்தேன், ஆனால் என்றைக்காவது ஒருநாள் இந்த உண்மையை நான் சொன்னால் நீங்க எல்லாம் விழித்துக் கொள்வீர்களோ என்ற நப்பாசையில் இன்று நான் சொல்லிவிட்டேன். அவ்வளவுதான், தமிழக இந்துக்களை இன்று நீங்கள் விழித்துக் கொள்ளவில்லை என்றால், உங்களையும், உங்கள் கலாச்சாரத்தையும், ஆதினங்களையும், மடங்களையும், சிவாச்சாரியார்களையும், இந்து மதத்திற்காக சிந்திக்கின்ற அரசியல் தலைவர்களையும், சமூக தலைவர்களையும் நீங்கள் பாதுகாத்துக் கொள்ளாவிட்டால் 25 வருடம் 30 வருடம் அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை, அடுத்த நான்கைந்து ஆண்டுகள் கூட தாக்கு பிடிக்க மாட்டீர்கள்.

இதுதான் உண்மை, அடுத்த தலைமுறை இந்துக்களுக்கு தான் சிக்கல் வரும் என்று முட்டாள்தனமாக கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் உங்கள் மிச்சம் இருக்கின்ற, எச்சம் இருக்கின்ற, சொச்சம் இருக்கின்ற கலாச்சார அடையாளங்கள் அழிக்கப்படும். நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளுங்கள், நமது கலாச்சாரத்தினுடைய, நமது முன்னோர்களுடைய சாதனை, பெருமை, அந்த சாதனை, பெருமை, வாழ்க்கை முறைக்கு காரணமாக இருந்த உந்து சக்தி இந்து மதம். அந்த சத்தியங்கள் உங்களுக்கு புரிந்தால்தான் உங்கள் எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளுகின்ற, அமைத்துக் கொள்ளுகிற தெளிவும், துணிவும், தைரியமும் உங்களுக்கு வரும். கடந்த காலங்களில் சத்தியத்தையும், சாத்தியத்தையும், சக்திகளை பற்றிய அறிவையும் இழந்த சமூகம் வேரை இழந்த மரமாகவிடும். எனவே விழித்துக் கொள்ளுங்கள் என அதில் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே பாஜகவினர் அரசியல் நோக்கத்திற்காக திமுகவை இந்து விரோத கட்சி என்றும், இந்து மதத்துக்கு எதிரான கட்சி என்றும் விமர்சித்து வருகிறது. அதேபோல் பல இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்கள் இடிக்கப்பட்டு வருவதை மேற்கோள்காட்டி, இந்து மதத்தை அழிக்கும் முயற்சியில் தீவிரமாக திமுக அரசு ஈடுபட்டு வருவதாகவும் பாஜக சார்பில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் நித்யானந்தாவும் தனது வீடியோவில் இந்து கோவில்கள் எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்டி இந்து மதம் அழிக்கப்பட்டு வருகிறது, இந்துக்கள் தமிழ் நாட்டை இழந்து விட்டார்கள், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்து மதம் கலாச்சாரம் துடைத்து எறியப்படும் என கூறியிருப்பது. சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.