பிரபல வார இதழ் துக்ளிக் பத்திரிகையின் 47வது ஆண்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. நடிகரும், துக்ளக் ஆசிரியருமான சோ.ராமசாமி கடந்த மாதம் காலமானார். அவரது மறைவுக்கு பிறகு, பத்திரிகையின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது அவருக்கு புகழாஞ்சலி செலுத்தி, விமர்சையாக கொண்டாடினர்.

டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் சிறப்புரையாற்றினார். இதில் நடிகர் ரஜினிகாந்த், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

துக்ளக் ஆசிரியராக தற்போது பொறுப்பேற்றுள்ள குருமூர்த்தி, விழாவில் பேசியதாவது:-

தமிழக அரசு இன்று தட்டு தடுமாறி தறிக்கெட்டு சென்று கொண்டிருப்பதை நாம் பார்த்து கொண்டு இருக்கிறோம். துக்ளக் பத்திகையில், என்ன எழுதவேண்டும் என யாரும் சொல்லித் தரவேண்டியதே இல்லை. இங்கு ஒரு குழு அமைத்து, அதில் முடிவு செய்கிறோம்.

துக்ளக் பத்திரிகையில் வருபவை குருமூர்த்தியான தனி மனிதனின் சிந்தனை கிடையாது. ஒரு குழுவின் முடிவு. அவரவரிடம் உள்ள உண்மை தன்மையை கொண்டு வந்து, படைப்பாக பிரசுரிக்கிறோம்.

மறைந்த ஆசிரியர் சோ, குடும்ப அரசியலை கடுமையாக எதிர்த்தார். அதுபற்றி பல கட்டுரைகளை எழுதினார். தமிழகத்தில் ஒரே ஒரு கட்சி மட்டும் குடும்ப அரசியல் நடத்தி வந்த்து. இன்று மற்றொரு கட்சியும் குடும்ப அரசியலில் சென்று கொண்டிருக்கிறது. இதை யாராலும் மறுக்க முடியாது.

 இதுபோன்ற குடும்ப அரசியலை பார்த்து கொண்டு, துக்ளக் சும்மா இருந்துவிடாது. என்னிடம் சிலர் தொடர்பு கொண்டு பேசினார்கள். அவர்கள் உங்களுக்கு ஏன் வீண் வம்பு, என கூறுகின்றனர்.

எல்லா பத்திரிகையாளர்களும் பயப்படுவதால் தான், நான் எழுதுகிறேன். பத்திரிகை உலகில் ஒருவித பயம் இருக்கிறது. யாரையும் எதிர்த்து பேசக்கூடாது என நினைக்கிறார்கள். இது தமிழகத்துக்கோ, இந்திய ஜனநாயகத்த்துக்கோ நல்லதாக தெரியவில்லை. நம் நாட்டின் ஆன்மிக உள்ளத்துக்கும் நல்லதல்ல. இவை அனைத்துக்கு ஒரே மருந்து, மாத்திரை எல்லாமே துக்ளக் மட்டும் தான்.

வழக்கமாக மேடை பேச்சுக்களில் சோ.ராமசாமியின் பேச்சை கேட்பது சுவாரிஸ்மாக இருக்கும். அதில, அரசியல் கலந்து நக்கல் பேச்சு தெரியும். சோ.ராமசாமி இறப்புக்கு பின், அவரைபோன்றே பேசிய குருமூர்த்தியின் பேச்சு, விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தது.