ஊழல் செய்வதில் அதிமுக திமுகவுக்கு எந்த வேறுபாடும் இல்லை என துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர்ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார் .  துக்ளக் பத்திரிகையின் 50ஆவது ஆண்டு விழா சென்னையில் நடந்தது .  அதில் நடிகர் ரஜினிகாந்த் , ஆடிட்டர் குருமூர்த்தி,  துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .  முன்னதாகப் பேசிய ரஜினி ,  கையில் முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்றும் ,   கையில் துக்ளக் பத்திரிக்கை வைத்திருந்தால் அறிவாளிகள் என்றும்  பேசியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .  பலரும்  ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் . 

 

இந்நிலையில் அங்கு  பேசிய  ஆடிட்டர் குருமூர்த்தி ஊழல் செய்வதில் திமுகவும் , அதிமுகவும் ஒன்றுதான் என தெரிவித்திருப்பது,  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது தொடர்ந்து பேசிய அவர் ,  குடியுரிமை சட்ட விவகாரத்தில் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் நிலையை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன.  இது ஆபத்தானது . இதை  எதிர்ப்பதால் லாபம் இல்லை என்பதால்தான் திமுக ,  சிவசேனா போன்ற கட்சிகள் நேற்று டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றார் .  பாபர் மசூதி விவகாரத்தில் இந்துக்கள் - இஸ்லாமியர்களுக்கு இடையே பிரச்சினை இல்லை ,  இடதுசாரி  அமைப்புகள்தான் ராமர் பிறந்த தற்கான ஆதாரத்தை காட்டுங்கள் என கேட்டு பிரச்சனையை உண்டாக்கினர் என்றார். 

ஜே என் யூவின்  டிஎன்ஏ நாட்டிற்கு எதிரானது ,  அது திருத்தப்பட வேண்டிய ஒன்று இல்லையென்றால் மூடப்பட வேண்டிய ஒன்று ஏற்றார் ,  சோ எப்போதும் வெளிப்படையாக செய்வார் ,  ஆனால் நான் வெளிப்படையாக செய்யமாட்டேன் என்றார் , தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு மரியாதை குறைந்துவிட்டது ,  காசு கொடுக்காமல் அவர்களால் கூட்டம் போட முடியவில்லை , லஞ்சத்தை  பொருத்தவரையில் திமுக அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை , தனக்கு முதன்முதலில்  எம்ஜிஆர் அவர்கள் நாத்திக அரசியலின் முதுகெலும்பை உடைத்தார், நாத்திக அரசியலை மாற்றினார், எனவே தனக்கு  முன்னிருக்கும்  பொறுப்பு  என்ன என்பது இப்போது நடிகர் ரஜினிக்கு தெரியும் என்று பேசினார்.