Asianet News TamilAsianet News Tamil

அமைச்சர் ஜெயக்குமாருக்கு இங்கிலீஷ் அர்த்தம் புரியல...! நான் சொன்னதன் விளக்கம் இதுதான்...! ஆதாரத்துடன் விளக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி...! 

auditor gurumoorthi definition to minister jeyakumar about him speech
auditor gurumoorthi definition to minister jeyakumar about him speech
Author
First Published Dec 26, 2017, 8:27 PM IST


ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி தினகரன் அபார வெற்றி பெற்றார். ஜனநாயகம் மடிந்து ஆர்.கே.நகரில் பணநாயகம் வென்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து பழனிசாமி-பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பிறகு தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட நாஞ்சில் சம்பத், புகழேந்தி, கலைராஜன், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக, பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் கடுமையாக விமர்சித்து குருமூர்த்தி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு தினகரன் ஆதரவு நிர்வாகிகள் ஒன்பது பேர் மீது அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பலவீனமான தலைவர்கள், ஆறு மாதங்களுக்குப் பிறகு நடவடிக்கை எடுத்துள்ளனர் என பதிவிட்டிருந்தார்.

குருமூர்த்தியின் இந்த கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக பதிலடி கொடுத்தார். தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், யார் இந்தக் குருமூர்த்தி. அவருக்கு முகமே கிடையாது. மற்றவர்களை விமர்சனம் செய்ய தடித்த வார்த்தைகளை அவர் பயன்படுத்தக் கூடாது. அவரின் தடித்த விமர்சனத்துக்கு நாங்கள் கொதித்தெழுந்தால் என்ன நடக்கும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தன்மானத்தை எந்தக் காரணத்துக்காகவும் விட மாட்டோம். அதிமுகவினர் காங்கேயம் காளை போல செயல்படுகின்றனர். குருமூர்த்தி தடித்த வார்த்தைகளைத் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் அவர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்திருந்தார். 

இந்நிலையில் நான் உபயோகப்படுத்திய வார்த்தையின் அர்த்தம் தெரியாமல் அமைச்சர் பேசுவதாகவும் அவருக்கு விளக்கவே இந்த பதிவு எனவும் பல்வேறு லிங்கை குறிப்பிட்டு டுவிட் செய்தார் குருமூர்த்தி. 

பல்வேறு ட்வீட்களின் தொகுப்பு இதோ...!

முதலில்Potential என்றால்  ஆற்றல் உள்ள என்று அர்த்தம். அதற்கு எதிர்மறையான து impotent என்கிற வார்த்தை. impotential என்கிற வார்த்தை கிடையாது.  நான் Twitter அனுப்பியது ஆங்கிலத்தில். இதற்கு தமிழில் இன்ன அர்த்தம் என்று கூறி Twitter அனுப்ப முடியாது. 

இரண்டாவது, அவர்களை நான் impotent என்று கூறியது அரசியல் ரீதியாக. மற்ற படி அவர்கள் எப்படி என்பது பற்றி எனக்கு அவசியம் இல்லை. Impotent என்றால் திறனற்றவர்கள் என்று அர்த்தமே தவிர வேறு அர்த்தம் அவர்கள் மனதில் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அரசியல் ரீதியாக அவர்கள் impotent தான்.

நான் பேசியதன் அர்த்தம் புரியாமல் என்னை அவதூறாக அமைச்சர் பேசிய தெருப் பேச்சுக்கு நான் பதில் தெருப்பேச்சில் ஈடுபட்டால் தான் நான் அவர் கூறியதற்கு  ஏற்றவனாவேன்.

நான் சர்வாதிகாரம் படைத்த இந்திரா காந்தி காலத்திலிருந்து எதிர்ப்புகளை சந்தித்தேன். இவர்கள் எதிர்ப்பு ஒரு குழந்தை விளையாட்டு. காலில் விழுவதையே அரசியல் கலாச்சாரமாக கொண்டவர்களுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சமீபத்தில் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் disgrace என்கிற வார்த்தை நாடாளுமன்றத்துக்கு ஏற்றதல்ல. Impotent அல்லது incompetent என்கிற வார்த்தைகள் ஏற்றுக் கொள்ளலாம் என்று disgrace என்கிற வார்த்தையை உறுப்பினர் வாபஸ் பெற்றார். அதனால் impotent என்பது சாதாரண வார்த்தை.

எனவே நான் டிவிட்டரில் கூறிய impotent என்கிற வார்த்தையின் அர்த்தம் தெரியாமல் அவர்கள் பேசுவதை பார்த்து பரிதாபப் படுவதை தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது

இது தான் ஆத்திரேலிய நாடாளும்றத்தில் impotent என்பது  ஏற்றுக்கொள்ள தக்கது என்று கூறி நடந்த விவாதம் பற்றிய link. https://t.co/psxGAS16Ba

அமைச்சர் அதிமுக அரசு என் மேல் நடவடிக்கை எடுப்பதை நான் வரவேற்கிறேன். எவ்வளவோ அரசுகள் எடுத்த நடவடிக்கைகளை நான் பார்திருக்கிறேன். இந்த நடவடிக்கையையும் சந்திப்பேன்.

பத்திரிகைகளில் impotent என்கிற வார்த்தையை சாதாரணம். "Impotent prime minister" என்று கூகிள் செய்யுங்கள் 988 முறைகள் பத்திரிகைகள் பயன்படுத்தியிருக்கிறார்கள். செப் 27 அன்று https://t.co/EFliFQ47EB இப்படி தலைப்பு செய்தி கொடுத்தது "Trump deleted tweets that show his impotence"

எனவே அதிமுக அமைச்சர் மட்டுமே impotent என்கிற வார்த்தையை ஆண்-பெண் சம்பந்தப்படுத்தி அர்த்தம் கொடுக்கிறார். அதற்கு நான் பொறுப்பல்ல. இத்துடன் நான் கூறியதில் எந்த தவறோ கண்ணிய குறைவோ கிடையாது என்று கூறி முடிக்கிறேன்.

இவ்வாறு டுவீட் செய்துள்ளார் ஆடிட்டர் குருமூர்த்தி. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios