14 ஆம் தேதி கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவு..! இன்றே அதிரடி காட்டும் ஸ்டாலின்..!

அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் தற்போது ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார் நடத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைந்து இன்றுடன் நான்கு நாளாகிறது. பெரும் துக்கத்தில் வாடி வரும் ஸ்டாலின், அதிலிருந்து சற்று மீண்டு தற்போது மீண்டும் கட்சி பணியில் முழு நம்பிக்கையுடன் அவருக்கே உண்டான பொறுமையான போக்கில், மீண்டும் களத்தில் இறங்கி உள்ளார்.

இந்நிலையில் தற்போது, அறிவாலயத்தில் நடைப்பெற்று வரும் கூட்டத்தில் திமுக முக்கிய தலைவர்களான, கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர்.பாலு, பொன்முடி உள்ளிட்டோருடன் ஸ்டாலின் திடீரென ஆலோசனை நடத்தி வருகிறார்.

மேலும் வரும்14ம் தேதி, திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதால், அன்றைய தினத்தில் எந்த மாதிரியான முடிவுகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது   

திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 7ம் தேதி காலமானார். இதையடுத்து அவரது உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், வரும் 14ம் தேதி, திமுகவின் அவசர செயற்குழு கூட்டத்திற்கு அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.