Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடி வியூகத்துக்கு செக்... உச்சநீதிமன்றத்தை நாடிய எம்.எல்.ஏ.க்கள்..!

சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மனுதாரரின் கோரிக்கை ஏற்று இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

assembly speaker notice...AIADMK Mlas case
Author
Tamil Nadu, First Published May 3, 2019, 12:47 PM IST

சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மனுதாரரின் கோரிக்கை ஏற்று இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. assembly speaker notice...AIADMK Mlas case

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 பேரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த 3 பேரும் அமமுகவில் பொறுப்பில் இருந்து வருவதாகவும் கொறடா ராஜேந்திரன் ஆதாரத்துடன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். அதில் 7 நாட்களுக்குள் 3 பேரும் விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார். assembly speaker notice...AIADMK Mlas case

இதனையடுத்து அடுத்த சில நிமிடங்களில் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என பேரவை செயலாளிடம் திமுக மனு அளித்தது. இந்நிலையில் இன்று 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக முறையிட்டுள்ளது.

 assembly speaker notice...AIADMK Mlas case

இதனிடையே சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருதாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளதால் நடவடிக்கை எடுக்க தடை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வில் 2 எம்.எல்.ஏ.க்கள்  சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios