சமீபத்தில் திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்து, திமுக வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றும் துரைசாமி தனக்கு ராசிபுரம் தொகுதியையும்  மகனுக்கு கெங்கவல்லி தொகுதிளையும் கேட்டு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. 

அதிமுகவில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய வி.பி.துரைசாமி 1989 தேர்தலில் போட்டியிட்டு வென்று துணை சபாநாயகர் ஆனவர். 2006ம் ஆண்டு திமுக சார்பில் வென்று சபாநாயகர் ஆனார். 2011, 2016 சட்டமன்ற தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். ஆகையால், இந்த தடவை திமுகவில் ராசிபுரம் தொகுதியும் கிடைப்பது, சீட் கிடைப்பதும் சந்தேகம் என்ற பேச்சுகள் எழுந்தது.

இந்த சூழ்நிலையில்தான் பாஜகவுக்குத் தாவிய துரைசாமி ராசிபுரம் தொகுதியில் போட்டியிட ஆயுத்தமாகி வருகிறார். மகனுக்கு கெங்கவல்லி  தொகுதிளையும் கேட்பதால் பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. வி.பி.துரைசாமியின் ஆதரவாளர்களிடம் விசாரித்த போது பாஜக மாநிலத் தலைவர் எல்.முருககும், வி.பி.துரைசாமியும்  ஒரு வகையில் உறவினர். அந்த பந்தத்தில் தான் முருகன் ஈஸியாக துரைசாமியை வளைத்துப் பிடித்தார். ராசிபுரம் தொகுதியில் சீட், தேர்தல் செலவுக்குப் பணம், கட்சியில் பதவி முடிந்தால் வாரியத் தலைவர் பதவி என்ற உத்தரவாதத்தின் அடிப்படிடையில் தான் பாஜகவில் இணைந்தார். 

தற்போது வெளியான பாஜகவின் உத்தேசப் பட்டியலில் வி.பி.துரைசாமிக்கு ராசிபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த 2016ம் ஆண்டு ராசிபுரம் தொகுதியில் துரைசாமி தேர்வு செய்யப்பட்ட போது அவரது மகன் அருண் பிரச்சாரம் செய்தார். அப்பவே 2021ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் கெங்கவல்லி தொகுதியை தனது மகனுக்கு கேட்பேன் என்று கூறியிருந்தார். இப்ப கட்சி மாறியதும் தனது மகனுக்கு கெங்கவல்லி தொகுதிக்கு வலைவிரிக்கிறார். ஆனால், பாஜகவில் அவரது பாச்சா பலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.