நடந்து முடிந்த  பீகார் தேர்தலில் காங்கிரஸ் உடனான கூட்டணி கட்சிகள் தோல்வியை தழுவியதை தொடர்ந்து தமிழகத்தில் கிட்டதட்ட தி.மு.க'வின் காலில் விழும் நிலைக்கு காங்கிரஸ் வந்துள்ளது. இந்த நிலையை உறுதிபடுத்தும் அளவிற்கு தமிழக காங்கிரஸ்  பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் அறிவித்துள்ளதாக தமிழக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா விடுத்துள்ள அறிக்கையில்...., "பீகார் தேர்தல் முடிவுகள் எங்களை பாதிக்காது, தமிழக அரசியல் களம் வேறு. கடந்த மக்களவை தேர்தலை போல வரும் சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க'வுடன் கூட்டணி தொடரும்" என குறிப்பிடபட்டுள்ளது.

மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க காங்கிரஸ் கட்சி ராகுல்காந்தியை பிரச்சாரத்திற்கு அனுப்ப திட்டங்கள் வகுத்து வகுத்துள்ளது.இந்த செய்தியை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளது. இந்த ராகுல்காந்தி பிரச்சார வருகையை கேள்விப்பட்ட தி.மு.க'வினர் மிகுந்த பதற்றத்தில் உள்ளனர். 

காரணம் ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியை பிரச்சாரம் செய்து வெற்றி பெற வைத்ததைவிட எதிர்த்து போட்டியிட்ட கட்சிகளை வெற்றி பெற வைத்ததுதான் அதிகம். அதிலும் காங்கிரஸ் சார்பில் பிரச்சாரம் செய்ய ராகுல் வருகிறார் என்றால் அதுதான் எதிர்கட்சிகளுக்கு உண்மையான சந்தோஷமாக இருக்கும். 

இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினை முதல்வராக்க ராகுல்காந்தி பிரச்சாரம் செய்ய வைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் அழுத்தமான முடிவில் உள்ளது. ஆனால் இதனை கேட்ட தி.மு.க உடன்பிறப்புகள்'தான் கெட்ட நேரம் துவங்கியது போல் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.ஆனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பது பா.ஜ.க'வினர் தான் ஏனெனில் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்யும் இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறுகிறதோ இல்லையோ பா.ஜ.க'வின் கூட்டணி கட்சிகள் கண்டிப்பாக வெற்றிவாகை சூடுகின்றன.