Asianet News TamilAsianet News Tamil

சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியை எப்படி வீழ்த்துவது... அதிமுக தலைமை முக்கிய ஆலோசனை..!

ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்களிடையில் ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 14-ம் தேதி  நடைபெற உள்ளது. 

assembly election.. AIADMK Consultative meeting
Author
Chennai, First Published Dec 9, 2020, 10:12 AM IST

ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்களிடையில் ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 14-ம் தேதி  நடைபெற உள்ளது. 

சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஸ்டாலின் காணொலி வாயிலாக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார். 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் திமுகவின் முன்னணி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், ஆளுங்கட்சியான அதிமுக, பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அறிவித்துவிட்டது. மேலும், தேர்தலுக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்தலுக்காக ஐந்து குழுக்களை அமைத்துள்ளனர். 

assembly election.. AIADMK Consultative meeting

இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;  டிசம்பர் 14ஆம் தேதி மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளனர். சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக இதில் ஆலோசிக்க இருக்கிறார்கள்.

assembly election.. AIADMK Consultative meeting

கடந்த நவம்பர் 20இல் நடைபெற்ற கூட்டத்தில் பேரவைத் தேர்தல் தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து வழங்கப்பட்ட ஆலோசனைகளின்படி மேற்கொண்ட பணிகள் குறித்த விவரங்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளனர். திமுக தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்ட நிலையில், அதிமுக தரப்பில் பிரச்சாரம் தொடங்குவது, கூட்டணி தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios