உடல்நிலையை கருத்தில் கொண்டு ஓய்வெடுக்க விரும்புவதால் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடிதம் எழுதியுள்ளார்.  

உடல்நிலையை கருத்தில் கொண்டு ஓய்வெடுக்க விரும்புவதால் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடிதம் எழுதியுள்ளார். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 354 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் நாளை பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்க உள்ளனர். தற்போது அமைச்சராக உள்ள பலருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது. மேலும் புதியவர்கள் சிலரும் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

Scroll to load tweet…

இந்நிலையில் தற்போது நிதி அமைச்சராக இருந்து வரும் அருண் ஜெட்லி, அமைச்சர் பதவியில் தொடர விரும்பவில்லை என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். 18 மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ள உடல்நிலையை காரணம் காட்டி அவர் அமைச்சர் பதவி வேண்டாம் என கடிதத்தில் தெரிவித்து இருக்கிறார்.

அமைச்சர் பதவிக்காக பலரும் முட்டி மோதிவரும் நிலையில் தானாக முன் வந்து அமைச்சர் பதவியை அருண் ஜெட்லி வேண்டாம் என உதறித் தள்ளி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.