அருண்கோயல் தேர்தல் ஆணையர் அல்ல.. பாஜக வாக்குச்சாவடி முகவர்.. இறங்கி அடிக்கும் வேல்முருகன்..!

ஒன்றிய அரசின் செயலாளராக பதவி வகித்த அருண் கோயல் கடந்த 18-ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். அடுத்த நாளே அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Arun Goel is not Election Commissioner.. BJP polling agent.. velmurugan

பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலின் அழுத்தத்தின் காரணமாகவே தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார் என வேல்முருகன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, குடியரசுத்தலைவர், ஆளுநர்கள், ராணுவ அதிகாரிகள், பேராசிரியர்கள் என நகராட்சி அலுவலக அதிகாரி வரை, பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலை சேர்ந்தவர்களை நிரப்பி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமித்துள்ளது. ஒன்றிய அரசின் செயலாளராக பதவி வகித்த அருண் கோயல் கடந்த 18-ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். அடுத்த நாளே அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதையும் படிங்க;- தமிழகத்தில் பாஜக அசுர வளர்ச்சி.. இதை திமுக நிர்வாகிகளே மறுக்க மாட்டார்கள்.. வேல்முருகன் சொன்ன ஷாக் தகவல்..!

Arun Goel is not Election Commissioner.. BJP polling agent.. velmurugan

இது தொடர்பாக, ஒன்றிய அரசுக்கு அப்படியான அவசரம் என்னவிருந்தது. மே 15-ஆம் தேதி தான் தேர்தல் ஆணையர் பணியிடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மின்னல் வேகத்தில் அடுத்த ஆணையருக்கான கோப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அப்படி மின்னல் வேகத்தில் ஒப்புதல் அளிக்க அவசியம் என்ன என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், தேர்தல் ஆணையர் நியமனத்தில் எந்த முறைகேடும் இல்லையென்றால் ஒன்றிய அரசு அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யட்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இதையும் படிங்க;-   தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் BJP!பெரிய கட்சி சிறிய கட்சியாக மாறப்போகிறது!அதிமுகவை எச்சரிக்கும் பூங்குன்றன்

Arun Goel is not Election Commissioner.. BJP polling agent.. velmurugan

ஜனநாயக விழுமியங்களையும், சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி பற்றிய அரசியலமைப்பு வழிகாட்டுதல்களையும் மிதித்து, பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பல், தனக்காக ஆட்களை, உயர் பதவிகளில் நியமித்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ்-சின் அழுத்தத் தந்திரங்கள், அரசாங்கத்திலும் கட்சியில் அதிகாரம் மிக்க பதவிகளிலும் தங்களால் பரிந்துரைக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளும்.

Arun Goel is not Election Commissioner.. BJP polling agent.. velmurugan

தற்போது அந்த அழுத்தத்தின் காரணமாகவே, தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றிய அரசின் இத்தகைய போக்கு வன்மையாக கண்டிக்கதக்கது. அருண்கோயல், தேர்தல் ஆணையராக செயல்பட மாட்டார். அதற்கு மாற்றாக, பாஜகவின் வாக்குச்சாவடி முகவராக மட்டுமே செயல்படுவார் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துக்கொள்கிறது என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;-  சதிகார கும்பல்களின் சதி திட்டங்களை தவிடு பொடியாக்கியவர் ஸ்டாலின்.. போற போக்கில் அதிமுகவை விளாசிய வேல்முருகன்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios