சதிகார கும்பல்களின் சதி திட்டங்களை தவிடு பொடியாக்கியவர் ஸ்டாலின்.. போற போக்கில் அதிமுகவை விளாசிய வேல்முருகன்!
தலைவரான பிறகு சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலிலேயே, சதிகார கும்பல்களின் சதி திட்டங்களை தவிடுபொடியாக்கி, தமிழக மக்களின் உள்ளங்களை குளிர வைத்து தனக்கு ஏற்பட்ட சோதனைகளை வரலாற்று சரித்திரமாக மாற்றி அமைத்து, தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.
திமுக தலைவராக 2-வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திமுக தலைவராக 2-வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தளபதி என போற்றுதலுக்குரிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.
இதையும் படிங்க;- 1.76 லட்சம் ஈழத் தமிழர்களை கொன்றபோது வராத ஒன்றிய அரசா.. இப்போது காப்பாற்றும்.. வெளுத்து வாங்கும் வேல்முருகன்.!
தலைவரான பிறகு சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலிலேயே, சதிகார கும்பல்களின் சதி திட்டங்களை தவிடுபொடியாக்கி, தமிழக மக்களின் உள்ளங்களை குளிர வைத்து தனக்கு ஏற்பட்ட சோதனைகளை வரலாற்று சரித்திரமாக மாற்றி அமைத்து, தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பாக, பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பலிடம் தமிழகத்தை அடமானமை வைத்திருந்தது அடிமை அதிமுக அரசு. அந்த அடிமை விலங்கை உடைத்தெறிந்து, சமூகநீதியை நிலை நாட்டியது திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசும், அதன் தலைவர் முதல்வர் அவர்களே.
காவி கும்பல்கள், நாட்டையே தன்கட்டுக்குள் வைத்துக்கொள்ள முயன்று வரும் சூழிலில், வட ஆரிய சக்திகளின் ஆதிக்கத்திற்கு, தமிழ் மண்ணில் இடம் இல்லை என்ற முழக்கம், தனது திராவிட, சமூக நீதியின் கோட்பாடுகளால் விண் அதிர வைத்த பெருமை முதல்வர் அவர்களையே சாரும். இத்தகைய நிலையில், திமுக தலைவராக 2-வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதையும் படிங்க;- அடித்து சித்ரவதை.. கதறும் தமிழர்களை பார்க்கும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது.. வேதனையில் வெதும்பும் வேல்முருகன்.!
அதோடு, போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள பொதுச் செயலாளர் துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்களுக்கும், திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மதிப்பிற்குரிய கனிமொழி எம்.பி அவர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.