Asianet News TamilAsianet News Tamil

ஏதோ அரசியல்வாதி தயாரித்தது போல் இருக்கும் ஆறுமுகசாமி அறிக்கை.. நீதிமன்றத்துக்கு நிச்சயம் செல்வார்கள்.. டிடிவி

துப்பாக்கி சூடு சம்பவத்தை டி.வி.யில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி கூறினார். ஒரு முதலமைச்சருக்கு முக்கிய பிரச்சினைகள் குறித்து நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தெரிவிக்கப்படும். 

Arumugasamy report looks like it was prepared by a politician... ttv dhinakaran
Author
First Published Oct 21, 2022, 6:33 AM IST

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் உலகத்தரம் வாய்ந்த டாக்டர்கள். ஜெயலலிதா மரணம் இயற்கையானது தான் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். 

தஞ்சாவூரில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சட்டசபையில் சபாநாயகருக்கு தான் அதிகாரம் அதிக அளவில் உள்ளது. ஆனால் நாற்காலி பிரச்சனைக்காக எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் நடத்துவது எந்த விதத்தில் நியாயம். சபாநாயகரின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளை பார்த்தால் பயந்து போய் பதற்றத்தில் இருப்பது தெரிகிறது.

இதையும் படிங்க;- ஜெயலிதாவுக்கு எப்போது மாரடைப்பு ஏற்பட்டது தெரியுமா? சசிகலா கூறிய பரபரப்பு வாக்குமூலம்..!

Arumugasamy report looks like it was prepared by a politician... ttv dhinakaran

முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் உடன் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசி உள்ளார் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். அது உண்மை என்றால் அதற்கான ஆதாரத்தை அவர் காண்பிக்கட்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். துப்பாக்கி சூடு சம்பவத்தை டி.வி.யில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி கூறினார். ஒரு முதலமைச்சருக்கு முக்கிய பிரச்சினைகள் குறித்து நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தெரிவிக்கப்படும். 

Arumugasamy report looks like it was prepared by a politician... ttv dhinakaran

ஆனால் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அவர் டி.வி.யில் பார்த்து நிலைமையை தெரிந்து கொண்டேன் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிபதி தாக்கல் செய்த அறிக்கையை தொடர்ந்து தமிழக அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தவறு செய்தது யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி கொடுத்துள்ள அறிக்கை ஏதோ அரசியல்வாதி கொடுத்துள்ள அறிக்கை போல் உள்ளது. உண்மை என்ன என்பது தமிழக மக்களுக்குத் தெரியும்.

Arumugasamy report looks like it was prepared by a politician... ttv dhinakaran

அரசியல் ரீதியாக தான் இந்த ஆணையமே அமைக்கப்பட்டது. இந்த அறிக்கையை எதிர்த்து, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு நிச்சயமாகச் செல்வர். நீதிமன்றத்தில் இந்த ஆணைய அறிக்கை கண்டனத்துக்கு உள்ளாகலாம். டாக்டர்கள் அந்த நேரத்தில், எது சரியானதோ, அதைச் செய்கின்றனர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் உலகத்தரம் வாய்ந்த டாக்டர்கள். ஜெயலலிதா மரணம் இயற்கையானது தான் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- ஓபிஎஸ்ஸுக்கு 71 வயதில் சோதனை.. அடிச்சி நொறுக்கி போராடுவோம்.. அப்பாவுக்காக துடிக்கும் ஓபிஎஸ் மகன்..!

Follow Us:
Download App:
  • android
  • ios