ஓபிஎஸ்ஸுக்கு 71 வயதில் சோதனை.. அடிச்சி நொறுக்கி போராடுவோம்.. அப்பாவுக்காக துடிக்கும் ஓபிஎஸ் மகன்..!
சட்டமன்றம் முடிந்த பிறகு ஸ்டாலினும் ஓபிஎஸ்ஸூம் அரைமணி நேரம் பேசிக் கொண்டதாகவும், ஓபிஎஸ்க்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் செயல்படுவது வெளிப்படையாக தெரிகிறது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் திமுகவோடு கூட்டு சேர்ந்துகொண்டு அதிமுகவை முடக்க நினைப்பதாக இபிஎஸ் குற்றம்சாட்டினார்.
பதவிக்காகவும் பணத்திற்காகவும் உண்மைக்கு புறம்பாக மனசாட்சி இல்லாமல் கழக உண்மை தொண்டனை வசை பாடுபவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தங்கள் தவறை உணர்ந்து மனம் வேதனைப்படுவதை காலம் உணர்த்தும் என ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்து தனித்தனியாக அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வை கண்டித்து போலீஸ் எதிர்ப்பையும் மீறி வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவித போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அவரது ஆதரவு எம்எல்ஏக்களை போலீசார் கைது செய்தனர். அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இபிஎஸ் சட்டமன்றம் முடிந்த பிறகு ஸ்டாலினும் ஓபிஎஸ்ஸூம் அரைமணி நேரம் பேசிக் கொண்டதாகவும், ஓபிஎஸ்க்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் செயல்படுவது வெளிப்படையாக தெரிகிறது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் திமுகவோடு கூட்டு சேர்ந்துகொண்டு அதிமுகவை முடக்க நினைப்பதாக இபிஎஸ் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க;- தங்கமணி கோட்டையில் புகுந்து வேட்டை.. முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய ஓபிஎஸ்.. அதிர்ச்சியில் இபிஎஸ்.!
இதுதொடர்பாக ஓபிஎஸ்ஸின் இளைய மகன் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தங்கத் தாரகை புரட்சித் தலைவியை அம்மா அவர்கள் வழிநடத்திய ராணுவ கட்டுப்பாட்டு உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களின் விசுவாசமிக்க முதன்மை தொண்டராக தொடர்ச்சியாக 16 ஆண்டுகள் அங்கீகரித்தார்கள். கழக ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு மாண்புமிகு அம்மா அவர்கள் நூற்றுக்கணக்கான பொறுப்புகளை வழங்கியிருக்கிறார்கள் ஆனால் எந்த ஒரு பொறுப்பையும் சரியாக செய்யவில்லை என்று திரும்பப் பெற்றதாக வரலாறு கிடையாது.
எங்கள் தர்ம தாய்க்கு பிறகு அவருடைய திறமையை யாரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை சூழ்ச்சிகளும் வஞ்சகமும் பொய் பிரச்சாரங்களையும் ஈடுபடுத்தி தன்னெழுச்சியாக அவருக்கு கிடைத்த மக்கள் செல்வாக்கை குறைப்பதற்கு அனைத்து தவறான வழிகளையும் செயல்படுத்தி வருகிறார்கள் என்பது மிகவும் வருத்தத்தக்கது. பதவிக்காகவும் பணத்திற்காகவும் உண்மைக்கு புறம்பாக மனசாட்சி இல்லாமல் கழக உண்மை தொண்டனை வசை பாடுபவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தங்கள் தவறை உணர்ந்து மனம் வேதனைப்படுவதை காலம் உணர்த்தும்.
யாருடைய எதிர்கால நலனுக்காக போராடுகிறாரோ அவர்களே வசை பாடுவது கழக வரலாற்றின் கரும்புள்ளி. தனக்கென்று எந்த கூட்டத்தையும் சேர்க்காமல் கழகத்தில் இருக்கும் அனைத்து தொண்டர்களையும் எந்த வேறுபாடும் காட்டாமல் ஒரே மாதிரி வழிநடத்தியதால் பல சோதனைகளை எதிர்கொண்டு கழகத்திற்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்து சென்றுள்ளார்.
தனது வாழ்க்கையில் அனைத்து பதவிகளையும் கடந்த 71 வயது உடைய ஒரு மனிதன் தன்னை வளர்த்துவிட்ட கழகம் தவறான வழியில் செல்லாமல் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக எந்த அளவுக்கு சோதனைகளை எதிர் கொள்கிறார் என்பதை பார்க்கும் பொழுது மகனாக என்னுடைய மனம் மிகவும் வேதனை பட்டாலும் கழக அடிமட்ட தொண்டனாக வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட சோதனைகள் வந்தாலும் கழக நன்மைக்காக கடைசி வரை போராடுவதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆன்மாவும் , இறைவனும் மக்களும் நல்லதொரு தீர்ப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என ஜெயபிரதீப் உருக்கமாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- அப்பாவி மாதிரி பேசிய எடப்பாடியும் இதுல குற்றவாளிதான்.. கேஸ் போட்டு தூக்குங்க.. கொதிக்கும் கே.பாலகிருஷ்ணன்.