பெண்களை இழிவாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க போவதில்லை என்றும், தான் கலைஞரின் பேரன் என்றும் உதயநிதி தெரிவித்தது தி.மு.கவினரையே கோபடைய செய்துள்ளது. 

தலைமைக்கு புகார் தெரிவிக்கப்படதை அடுத்து உதயநிதி தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால், உதயநிதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெண்கள் இயகங்கள் தெரிவித்துள்ளன. சட்டமன்ற தேர்தலையொட்டி, கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. உதயநிதி பிரச்சாரத்தின்போது, அரசியலில் உள்ள பெண்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் கருத்துக்ளை தெரிவித்தார். பொது மக்கள் முகம் சுழிக்கும் வகையில் உதயநிதி தரம் தழ்ந்த கருத்துகளை தெரிவித்தது பெண்கள் மட்டும் அல்லாது தி.மு.கவினரே கடும் கோபத்தில் ஆழ்த்தியது. உதயநிதி தனது பேச்சிற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் பெண்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர்.

 

இதையடுத்து,  விழுப்புரத்தில் நேற்று பேசிய உதயநிதி, நான் கலைஞரின்  பேரன்,  மன்னிப்பு கேட்கமாட்டேன் என கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே குடும்ப அரசியலின் அடிப்படியில் கட்சி பொறுப்புக்கு வந்த உதய் என்று அவர் மீது குற்றச்சாட்டு  வைக்கப்பட்டு வரும் நிலையில், உதயநிதியின் இந்த பேச்சு, குடும்ப அரசியல் திமிரை பறைசாற்றும்  விதமாக அமைந்துள்ளதாக திமுகவினர் வருத்தம் கொள்கின்றனர். எது விதைக்கப்பட்டதோ, அது தன் வளரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், பெண்களை பற்றி தவறாக பேசிய உதயநிதி ,தான் கருணாநிதியின் பேரன் என்று கூறியதை பொருத்திப்பார்க்க முடிகிறது. 

தன்னுடைய பேச்சிற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் “வேண்டும் என்றால் என் மீது வழக்கு போட்டு கொள்ளட்டும்” என்றும் உதயநிதி தெரிவித்தார். இந்நிலையில், மன்னிப்பிற்கு பதிலாக தன்னுடைய இழிவான பேச்சிற்கு, வருத்தம் தெரிவிப்பதாக உதயநிதி கூறியுள்ளார். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருப்பதாக பெண்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். உதயநிதி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் பெண்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும், உதயநிதி தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய முடியாத நிலை ஏற்படும், அவர் எங்கு பிரச்சாரத்திற்கு சென்றாலும் அங்கு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் பெண்கள் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.