Asianet News TamilAsianet News Tamil

முடிஞ்சா என்னை அரெஸ்ட் பன்னுங்க... சவால் விடுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!!

கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தன்னை கைது செய்ய வேண்டும் என்று கூறுயிருக்கும் நிலையில் முடிந்தால் தன்னை கைது செய்யட்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

arrest me if you can tn bjp leader annamalai challenged
Author
First Published Sep 27, 2022, 9:46 PM IST

கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தன்னை கைது செய்ய வேண்டும் என்று கூறுயிருக்கும் நிலையில் முடிந்தால் தன்னை கைது செய்யட்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார். திண்டுக்கல் அடுத்துள்ள குடைப்பாறைப்பட்டி பகுதியில் கடந்த 25 ஆம் தேதி பாஜக மாநகர மேற்கு மண்டல தலைவர் செந்தில் பால்ராஜ் குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்களுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது தொடர்பாக தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ’நிதி மேலாண்மை படிச்ச உங்களுக்கு, மக்களின் நாடி துடிப்பு தெரியல’ - பிடிஆரை கலாய்த்த ஆர்.பி உதயகுமார் !

மேலும் இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர். இதனிடையே சம்பவம் நடைபெற்ற இடத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சியின் மீது உள்ள காழ்ப் புணர்ச்சி காரணமாக இது போன்ற தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்பினரின் உடைமைகள் சேதப்படுத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: கோவை வருகிறாரா ஆ.ராசா? சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என பாஜக புகார்!!

திண்டுக்கல்லில் நடந்த தீ வைப்பு சம்பவத்திற்கு தொடர்புடைய ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர். இதில் தொடர்புடைய மற்ற நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாரதிய ஜனதா கட்சியின் தொடர் போராட்டம் காரணமாக ஆங்காங்கே நடைபெற்ற தீவைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், என்னை கைது செய்ய வேண்டும் என்று கூறுகிறார். முடிந்தால் என்னை கைது செய்யட்டும் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios