நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், டிசம்பர் 31-ம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் ட்விட்டரில் அறிவித்தார் ரஜினி. மேலும் மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல என்றும் ட்விட்டரில் கூறியிருந்தார். பின்னர் போயஸ்காரடனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனா மூர்த்தியையும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் அறிவித்தார்.

 
இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜூனா மூர்த்தி நேற்று வரை பாஜகவில் இருந்தவர். அக்கட்சியின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்தார். கட்சியின் தலைவர் எல்.முருகன் நடத்தும் வேல் யாத்திரையிலும் பங்கேற்று வந்தார்.  இந்நிலையில் ரஜினி கட்சியில் இணைவதற்காக, அவர் ராஜினாமா கடிதத்தை கட்சிக்கு அனுப்பியதாகவும், அவரை உடனே பதவியிலிருந்து விடுவித்ததாகவும் பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் தெரிவித்திருந்தார்.