திருமாவளவன், சீமானை கைது செய்ய வேண்டும்..! டெல்லியில் 10 பேருடன் ஆர்ப்பாட்டம் நடத்திய அர்ஜுன் சம்பத்

தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு ஆதரவாக பேசி வரும் திருமாவளன் மற்றும் சீமானை கைது செய்து அவர்களது கட்சியையும் தடை செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.

Arjun Sampath protests to arrest Thiruma and Seeman

பிஎப்ஐக்கு ஆதரவாக திருமா, சீமான்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு மீது நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் தேசிய புலனாய்வு அமைப்பு நாடு முழுவதும் சோதனை நடத்தி அந்த அமைப்பின் நிர்வாகிகளை கைது செய்தது. இதனையடுத்து அந்த அமைப்பிற்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்தது. இந்தநிலையில் இந்த அமைப்பிறக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசிவருவதாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் குற்றம்சாட்டியிருந்தனர். 

10 வருடங்களில் கருப்பு, நீல நிற சட்டை அணிய முடியாத நிலை வரலாம்...!ஆர்எஸ்எஸ்க்கு எதிராக அலறும் திருமாவளவன்

Arjun Sampath protests to arrest Thiruma and Seeman

டெல்லியில் போராட்டம் நடத்திய அர்ஜூன் சம்பத்

இந்தநிலையில் டெல்லியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அர்ஜூன் சம்பத்திற்கு ஆதரவாக 10 பேர் பதாகைகளோடு ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பவத், மத்திய அரசு இந்தியாவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் அமைப்பை தடை செய்ய பிறகும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அந்த இயக்கத்தை ஆதரித்து பேசி வருகின்றனர். சீமான் ஏற்கனவே யாசிக் மாலிக்கை தமிழகம் அழைத்து வந்து தனித்தமிழ்நாடு கோரும் போராட்டத்தில் கலந்து கொள்ள வைத்துள்ளார்.  தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. தொண்டர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.பேரணிக்கு ஒரு தலைப்புச்சமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். 

இதையும் படியுங்கள்

கொடநாடு கொலை வழக்கு ...! குற்றவாளி யார்..? சிபிசிஐடி விசாரணை தொடங்கியது
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios