10 வருடங்களில் கருப்பு, நீல நிற சட்டை அணிய முடியாத நிலை வரலாம்...!ஆர்எஸ்எஸ்க்கு எதிராக அலறும் திருமாவளவன்

 பாப்புலர் பிராண்ட் அப் இந்திய என்ற அமைப்பை தடை செய்த ஒன்றிய அரசு, 18 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தொடர்புடைய ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஏன் தடை செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். 

Thirumavalavan has requested that RSS rallies should not be allowed in Tamil Nadu

பெரியாருக்கு பூணுல் போட முயற்ச்சி

பேராசிரியர் ஜெகதீசன் எழுதிய வாழும் வரைக்கும் வள்ளுவம் நூல் வெளியீட்டு விழா சென்னை வேப்பேரியில் உள்ள திராவிட கழக தலைமை அலுவலகமான பெரியார் திடலில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி வீரமணி நூலை வெளியிட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெற்றுக் கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய  திருமாவளவன், பெரியாருக்கு சில பேர் பூணூல் போட்டு பார்க்கிறார்கள், சில பேர் காவி உடுத்தி பார்க்கிறார்கள். பெரியார் காவியை விரும்பி இருந்தால் சங்கராச்சாரியார்களுக்கு இடம் இருந்திருக்காது. தீவிர ஆன்மிக குடும்ப பின்னணியில் பிறந்து, சாதி, மத  இல்லை என்று சொன்னவர் பெரியார். உழைக்கும் மக்களின் குரலாக மாறி, அவர்களின் விடுதலைக்கு போராடியவர் பெரியார். 

Thirumavalavan has requested that RSS rallies should not be allowed in Tamil Nadu

அரைக்கால் சட்டையில் அமைச்சர்கள்

ஈரோட்டில் பிறந்த வள்ளுவர் தந்தை பெரியார், வள்ளுவமும் பெரியாரின் கொள்கைகளும் ஒன்று தான். பெரியார் பிறந்த இந்த மண்ணில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை  நாம் அனுமதிக்கலாமா? மதத்தின் பெயரால் தமிழ்நாட்டை வன்முறை காடாக மாற்றிட வித்திடுகிறார்களே அதை நாம் அனுமதிக்க போகிறோமா? ஆர்எஸ்எஸ் பேரணி மூலம் சமூகநீதியை பாதுகாக்க போகிறார்களா? ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது மட்டும்தான் அவர்களின் நோக்கம். புதுச்சேரியில் மூன்று அமைச்சர்கள் அரைக்கால் சட்டை போட்டு ஆர்எஸ்எஸ் பேரணியில் கலந்து கொள்வது எவ்வளவு வெட்க கேடானது. ஆர்எஸ்எஸ் சராசரி ஜனநாயக இயக்கம் இல்லை, அவர்கள் பாசிச  இயக்கம். மக்களின் அத்திவாசிய பிரச்சனைக்காக ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தவில்லை, மதவாத கருத்துகளை இளைஞர்களிடம் புகுத்தி பிரிவினைவாதத்தை ஏற்படுத்த தான் இந்த பேரணியை நடத்த துடிக்கின்றனர். 

சென்னைக்கு காட்டும் அக்கறை மதுரைக்கும் காட்ட வேண்டும்- ஸ்டாலினை சீண்டும் ஆர்பி உதயகுமார்

Thirumavalavan has requested that RSS rallies should not be allowed in Tamil Nadu

18 இடங்களில் குண்டு வெடிப்பு

ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு 18 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தொடர்பு உள்ளது. தீவிர அமைப்பு தொடர்பு உள்ளது என  பாப்புலர் பிராண்ட் அப் இந்திய என்ற அமைப்பை தடை செய்த ஒன்றிய அரசு, 18 குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தொடர்புடைய ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்யவில்லை என விமர்சித்தார்.  இது போன்ற பேரணிக்கு நாம் ஆதரித்தால் அடுத்த 10 ஆண்டுக்கு பிறகு நாம் கருப்பு, நீலம், சிவப்பு சட்டை அணிய முடியாது.  மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். தமிழ்நாடு கருத்தால் முற்போக்கானது. 11 ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் நாம் காட்டுகிற ஒற்றுமையை பார்த்து  அவன் வாலை சுருட்டிக் கொண்டு ஓட வேண்டும்.

Thirumavalavan has requested that RSS rallies should not be allowed in Tamil Nadu

எரிமலையாக ஸ்டாலின்

பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் கலவையாக நமது முதலமைச்சர் இருக்கிறார். விஜயகாந்த் அவர்களின் தேமுதிக எதிர்கட்சியாக உருவான போது திமுக என்ற கட்சியே இனி இல்லை என்று சொன்னவர்கள் மத்தியில், அடுத்த தேர்தலில் 30 தொகுதி வித்தியாசத்தில் எதிர்கட்சியாக அமர்ந்து திமுக அடுத்த தேர்தலில் எதிர்கட்சியே இல்லை என்று பெருவாரியான வெற்றி பெற செய்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் என குறிப்பிட்டார்.  சமூக நீதிக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை முதலமைச்சர் பார்த்து கொண்டு இருக்கிறார், எரிமலை பார்ப்பதற்கு அமைதியாக இருப்பது தெரியும் , அது வெடிக்கும் போது தான் அதன் தீவிரம் தெரியும் என திருமாவளவன் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஒரே நாளில் 58 பேர் பணி நீக்கம்..! தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும்- வைகோ


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios