Asianet News TamilAsianet News Tamil

தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள தரைமட்டத்திற்கு தரம் தாழ்த்து போகிறார்கள்.. மு.க.ஸ்டாலின் கொந்தளிப்பு..!

கன்னியாகுமரியில் அண்ணா சிலை அவமதிப்பிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

arignar anna statue Saffron flag...MK Stalin condemned
Author
Tamil Nadu, First Published Jul 30, 2020, 3:44 PM IST

கன்னியாகுமரியில் அண்ணா சிலை அவமதிப்பிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம்  குழித்துறை சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டியும், காவிக்கொடியையும் கட்டியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த செயலுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

arignar anna statue Saffron flag...MK Stalin condemned

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டி குப்பை வீசி அவமதிப்பு செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

arignar anna statue Saffron flag...MK Stalin condemned

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கன்னியாகுமரி, குழித்துறையில் பேரறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து தரம் தாழ்ந்து தரைமட்டத்துக்கும் கீழே போகிறது அவர்களின் எண்ணம். தங்களை அடையாளம் காட்ட தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மேதைகளிடம் வன்மம் காட்டுகிறார்கள்! குற்றவாளிகளைக் கைது செய்க! என காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios