அப்போது அவர் பயபக்தியுடன் அங்கவஸ்திரம் மட்டும் அணிந்து இந்து முறைப்படி வரவேற்பை பெற்றுக் கொண்டு ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். இஸ்லாமிய சமூகத்தை சேந்த முகம்மது ஆரிஃப்கான் இந்து கடவுள் வழிபாட்டில் விருப்பமுள்ளவர்.  கடந்த 6ம் தேதி கேரளாவின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட  முன்னாள் மத்திய அமைச்சர் ஆரிப் முகமது கான், முத்தலாக் முறையை மிக கடுமையாக எதிர்த்தவர். 

இஸ்லாமிய அடிப்படைவாதங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர். 1970களில் சரண்சிங்கின் பாரதிய கிராந்தி கட்சி மூலம் அரசியலுக்கு வந்தவர். 26 வயதில் உத்தரப்பிரதேச எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  பிறகு காங்கிரஸில் இணைந்தார்.  அங்கு முத்தலாக் விவகாரத்தில் ராஜீவ் காந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காங்கிரஸில் இருந்து விலகி ஜனதா தளத்தில் சேர்ந்தார்

தேசிய முன்னணி ஆட்சியில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். பின்னர் ஜனதா கட்சியில் இருந்து விலகி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் ஐக்கியமானார். 2004-ல் பாஜகவில் தம்மை இணைத்துக் கொண்டார் அவர். ஆனாலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். அண்மையில் மத்திய அரசின் முத்தலாக் தடை சட்டத்துக்கு ஆதரவாக கருத்துகளை கூறி வந்தார் ஆரிப் முகமது கான். 

அதன் காரணமாக தற்போது கேரளாவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். முஸ்லீமாக இருந்தாலும் இந்து சமய வழிபாட்டின் மீது அதிக மரியாதை கொண்டவர் ஆரிஃப் முகம்மது கான்.