தபேலா எடுத்து அடிப்பவன் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது என இளையராஜாவை ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையாக விமர்சித்துள்ளார். வறுமையில் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் போது கம்யூனிசம் பேசுவதும், பணம் புகழ் வந்தபிறகு  உயர்சாதி என நினைத்துக் கொள்வதும் என்ன நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

தபேலா எடுத்து அடிப்பவன் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது என இளையராஜாவை ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையாக விமர்சித்துள்ளார். வறுமையில் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் போது கம்யூனிசம் பேசுவதும், பணம் புகழ் வந்தபிறகு உயர்சாதி என நினைத்துக் கொள்வதும் என்ன நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணல் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இலையராஜாவை விமர்சித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பிரச்சார பயணத்தை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நேற்று ஈரோட்டில் மேற்கொண்டார். அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டார், அப்போது பேசிய அவர், தபேலா எடுத்து அடிப்பவன் எல்லாம் இசைஞானி ஆக முடியாது.

பணம் வந்துவிட்டால் நீ உயர்சாதி ஆகிவிட முடியாது. தமிழ்நாட்டில் சில அகராதிகள் இருக்கிறார்கள், கேட்டால் உண்மையிலேயே நான் இசை மன்னன் என்று கூறிக்கொள்கிறார்கள், இசை மன்னன் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தபேலா எடுத்து அடிக்கிறவர்கள் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது. வறுமையில் சாப்பாட்டுக்கே வழி இல்லாத போது கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்வதும், பணமும் புகழும் வந்தபிறகு தன்னை உயர் சாதி என நினைத்துக் கொள்வதும் என்ன நியாயம். நான் யாரை சோல்கிறேன் என்று உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். இளையராஜா வா கிட்டத்தட்ட அவருக்கு எண்பது வயதாகிவிட்டது. துவக்கத்தில் தொழிலாளர்களின் நலன் குறித்து பாடிய நீ பணமும் புகழும் வந்தவுடன் மேலும் பணக்காரன் ஆக வேண்டுமென்ற ஆசையில் நீ திடீரென பக்திமான் ஆகிவிட்டாய்.

பக்திமான் ஆகலாம் அதனால் தவறு என்று சொல்ல மாட்டேன். அது உங்கள் விருப்பம் உங்கள் விருப்பத்தில் நான் எப்படி தலையிட முடியும். அது போல எங்கள் விருப்பத்திற்கு நீ மரியாதை கொடு. அதைவிடுத்து அம்பேத்கர் போன்றவர்களுடன் மோடியை ஒப்பிடுவது என்ன நியாயம்? அம்பேத்கர் செய்த தியாகம் என்ன, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அவர். இந்த நாட்டிற்கு அரசியலமைப்பு வகுத்துக் கொடுத்தவர் அவர். நினைத்திருந்தால் எத்தனையோ உயரத்திற்கு அவர் சென்று இருக்கலாம். ஆனால் இழி நிலையில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் உழைக்க வேண்டுமென பாடுபட்டார். அவருடன் மோடியுடன் ஒப்பிட்டு கேடி தானம் செய்யலாமா? இன்னும் சொல்லப்போனால் மோடியை பெரியாருடன் ஒப்பிடகூட தயங்கமாட்டார்கள்.

பெரியார் தாடி வைத்திருக்கிறார், மோடியும் தாடி வைத்திருக்கிறார் என்று காரணம் கூறுவார்கள். ஏன் மோடியை ஹிட்லருடன் ஒப்பிடலாமா, முசோலினியுடன் ஒப்பிடலாமா? இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவரை ஏன் இப்படி அசிங்கம் செய்கிறீர்கள். பெரியார் திரைப்படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று சொன்னவர்தான் இந்த இளையராஜா, அவர் மனதிற்குள் சங்கராச்சாரியார் என்று நினைப்பு. சங்கராச்சாரியாரையே ஜெயில் தள்ளிய காலநிலை இவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.