திராவிட இயக்கங்களின் கொள்கையை ஏற்றுக் கொள்பவர்கள் சமூக நீதியின் எதிரி என மு.கஸ்டாலின் பேசியதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது. 

பிரச்சாரக் கூட்டங்களில் பேசும் போதோ... அல்லது திருமண விழாக்களில் பேசும்போதோ அவ்வப்போது ஸ்டாலினின் பேச்சு பிறழ்கிறது. பழமொழிகளை மாற்றி பேசுவது, சுதந்திர தின விழா குடியரசு தின விழா தேதிகளை மாற்றி கூறுவது, பண்டிகைகளின் பெயர்களை மாற்றிக் கூறுவது, உலகத் தலைவர்களின் பெயர்களை தவறுதலாக உச்சரிப்பது என அவ்வப்போது தவறாக உச்சரித்து, அல்லது மாற்றி பேசி வருகிறார். 

இந்நிலையில் தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ஸ்டாலின் திராவிட கொள்கைகளை சித்தாந்தமாக கொண்ட கட்சியின் தலைவர் அவர் பேசும்போது திராவிட கொள்கைகளை ஆதரிப்பவர்கள் சமூக நீதியின் எதிரி என பேசியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

சொந்த கட்சியின் கொள்கைகளை ஆதரிப்பவர்களை சமூக நீதியின் எதிரிகள் என்று ஸ்டாலின் கூறியிருப்பது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மற்றொரு புற, இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டதாக திமுக தொண்டர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.