திராவிடத்தை வளர்த்து ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தியது தேவேந்திரர்களும் பறையர்களும். ஆனால், அதிகாரத்தை சுவைத்து தின்று கொழுத்தது உங்கள் வகையாறா ஆச்சே? என திமுக எம்.எல்.ஏ.,வும் அக்கட்சியில் ஐடி விங் மாநில செயலாளருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் கேள்வி எழுப்பியுள்ளார் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த ஷ்யாம் கிருஷ்ணசாமி.

நீதிக்கட்சியும் - திமுகவும் நூறாண்டுகாலம் போராடி, பிற்படுத்தப்பட்ட (OBC,BC & MBC),தாழ்த்தப்பட்ட (SC)& பழங்குடியின (ST) மக்களின் கல்வியுரிமையை, முன்னேறிய பிரிவினரான பிராம்மணர்களிடம் இருந்து மீட்ட, திராவிட இயக்க வரலாற்றை தலைவர் கலைஞர் அவர்கள் மிக எளிமையாக விளக்கியுள்ளார் என திமுக ஐடி விங் ட்விட்டரில் பதிவிட்டு இருந்ததை பகிர்ந்த பி.டி.தியாகராஜன்,"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு." என்கிற திருக்குறளை மேற்கோள் காட்டியிருந்தார். 

இதனால் வெறுப்பாகிப்போன புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி செயலாளர் ஷ்யாம் கிருஷ்ணசாமி, ‘’என்ன பி.டி.தியாகராஜன் சார், உங்களிடமிருந்தோ, என்னை ட்விட்டரில் டேக் செய்த திமுக ஐடி விங் சில்லறைகளிடமிருந்தோ பதிலை காணலயே?

 

திராவிடத்தை வளர்த்து ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தியது தேவேந்திரர்களும் பறையர்களும். ஆனால், அதிகாரத்தை சுவைத்து தின்று கொழுத்தது உங்கள் வகையாறா ஆச்சே? யாருக்கு நன்றியிருக்க வேண்டும். நன்றி கெட்டவர்கள் யார்? எங்கள் மக்களின் வாழ்விடங்களே திராவிடத்தின் தொட்டில்களாக விளங்கின என்பதை மறந்து விட்டீர்களா? பள்ளர், பறையர் கட்சி என்ற முத்திரையோடு வளர்ந்த இயக்கம், ஆனால் அதிகாரமோ உழைக்காத நில பிரபு PTRகளிடம். ஆயிரகணக்கான ஏக்கர் நிலங்கள் PTR வகையார்களிடம் வந்தது எப்படி?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.