அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்ட அமமுக வேட்பாளரும், மாநில அம்மா பேரவை தலைவருமான சாகுல் ஹமீது மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 

நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தினகரனின் அமமுக டெபாசிட் வாங்க முடியாமல் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால், அதிருப்தி அடைந்த முன்னணி நிர்வாகிகளான செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா, புகழேந்தி ஆகியோர் திமுக, அதிமுகவில் இணைந்தனர். இதனால், டிடிவி.தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனையடுத்து, நடந்த முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 90-க்கும் மேற்பட்ட ஒன்றியங்களை கைப்பற்றி ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளை அலறவிட்டார். 

இதையும் படிங்க;- அமமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்... டி.டி.வி. தினகரன் அறிவிப்பு..!

அதேபோல் அமமுக கைப்பற்றிய பெரும்பாலான இடங்கள் அதிமுக செல்வாக்கு மிகுந்த இடங்களில் வெற்றி பெற்றால் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக அதிர்ச்சியடைந்தனர். நகராட்சி தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ளதால் அதற்குள் அமமுக கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தூக்க திமுக, அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அசைமெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- தலைநகரை துடைத்த துடைப்பம்... அமித் ஷாவின் ஓவர் கான்பிடன்டால் மூழ்கிய தாமரை..!

இந்நிலையில், அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்ட அமமுக வேட்பாளரும், மாநில அம்மா பேரவை தலைவருமான சாகுல் ஹமீது மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த சாகுல் ஹமீது முதலில் விஜயகாந்த் கட்சியான தேமுதிகவில் இருந்தார். அவரை, அதிமுக பக்கம் இழுத்து வந்தவர் செந்தில் பாலாஜி தான். அவரை எதிர்த்தே அமமுக சார்பில் சாகுல் ஹமீது களம் காண்டார். அதிமுகவில் செந்தில் பாலாஜி வளர்ந்து வந்த போது, தன்னுடைய தளபதியாக சாகுல் ஹமீதை உருவாக்கினார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் டிடிவி.தினகரன் கட்சிக்கு தாவிய செந்தில்பாலாஜி சாகுல் ஹமீதையும் உடன் அழைத்து சென்று அமமுகவில் இணைத்தார்.

இதனையடுத்து, அமமுகவில் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக செந்தில் பாலாஜி திமுகவில் சேரும் போது சாகுல் ஹமீது வர மறுத்துவிட்டார். ஆனால், அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக டி.டி.வி.தினகரன் சாகுல் ஹமீதை களமிறக்கினார். இந்நிலையில், தனது அரசியல் குரு செந்தில்பாலாஜி அழைத்ததின் பேரில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுமுகவில் இணைந்தார். மேலும், மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிங்கை பிரதீப் குமார், இணை செயலாளர் கோபிநாத் ஆகியோர் நேற்று திமுகவில் இணைந்துள்ளது டிடிவி.தினகரனை அதிர்ச்சியடைய செய்துள்ளது.