அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தில் இருந்து திருவள்ளூர், விருதுநகர் மாவட்டச் செயலாளர்களை டி.டி.வி. தினகரன் அதிரடியாக மாற்றியுள்ளார்.  

இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த லக்கி முருகன் விடுவிக்கப்பட்டு, போரூர் பிள்ளையார் கோயில் முதல் தெருவைச் சேர்ந்த  ஜீவானந்தம், புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். விருதுநகர் மாவட்டம் 2-ஆக பிரிக்கப்பட்டு, விருதுநகர் மேற்கு மாவட்டம், மத்திய  மாவட்டமாக பிரிக்கப்படுகிறது. மேற்கு மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், மத்திய மாவட்டத்தில் சாத்தூர், சிவகாசியும் சேர்க்கப்படுகிறது.

விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக காளிமுத்துவும், மத்திய மாவட்டச் செயலாளராக எஸ்.ஜிசுப்பிரமணியனும் நியமிக்கப்படுகின்றனர். கட்சியின் இளைஞர் பாசறை துணை செயலாளர் பொறுப்பில் இருந்த விக்னேஷ், சரவணக்குமார் ஆகியோர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.