அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் கே.சி.பழனிசாமி தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த சட்டமன்ற தேர்தலில் தஞ்சை, அரவக்குறிச்சியில் ஆகிய தொகுதிகளில் தேர்தல் விதிகளை மீறி பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் எழுந்ததையடுத்து, அந்த பகுதிகளில் தேர்தல் ரத்தானது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சீனிவேல், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ஏற்கும் முன்பே உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார். இதனால், அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் அடுத்த மாதம் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.

தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நலக்கூட்டணி ஆகிய கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் 3 தொகுதி தேர்தலிலும் போட்டியிடுகிறது.

இந்த 3 தொகுதிகளிலும் இன்று அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் கே.சி.பழனிசாமியும், அதிமுக சார்பில் செந்தில் பாலாஜியும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க. சார்பில் போட்டியிடும் கே.சி.பழனிசாமி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்