A.Rasa release book about his 2G case

இந்த தேசத்திலேயே அதிக நிதி வைத்திருக்கும் எனும் பட்டத்தை பெற்றிருக்கும் தி.மு.க. மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கிறது. அது 2ஜி வழக்கின் தீர்ப்பு. 

இந்த தீர்ப்பின் முடிவை ஒட்டுமொத்த தேசிய அரசியலும் துல்லியமாக உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. காரணம் இந்த தீர்ப்பின் மூலம் தி.மு.க.வின் தலைவிதி மட்டும் நிர்ணயிக்கப்பட போவதில்லை, கூடவே காங்கிரஸின் வாழ்விலும் இந்த தீர்ப்பு அழுத்தமான விளைவுகளை உருவாக்கும். 

இந்நிலையில், கருணாநிதியை பிரதமர் மோடி அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்திருப்பதன் மூலம் 2ஜி வழக்கு தி.மு.க.வுக்கு சாதகமாகத்தான் வர வாய்ப்பிருக்கிறது! இதன் மூலம் அ.தி.மு.க. மீது மக்கள் வெறுப்பில் இருப்பதை புரிந்து கொண்டிருக்கும் பி.ஜே.பி. தி.மு.க. பக்கம் சாயும்...என்றெல்லாம் பேச்சு எழுந்திருக்கிறது. 

இந்நிலையில் 2ஜி வழக்கின் முக்கியப் புள்ளியான ஆ.ராசா சமீபத்தில் தன் திருவாய் மலர்ந்து ஒரு முக்கிய தகவலை உதிர்த்திருக்கிறார். அதாவது...”ஸ்பெக்டரம் வழக்கில் நான் கடந்து வந்த பாதையைப் பற்றி ஆங்கிலத்தில் புத்தமாக எழுதியிருக்கிறேன். இதை டெல்லியில் ஜனவரி 5 அல்லது 6-ம் தேதி வெளியிட இருக்கிறேன். அந்தப் புத்தகம் வெளிவந்தால், பெரும் புயலையே கிளப்பும். அந்தப் புத்தகம் தமிழாக்கம் செய்யப்பட இருக்கிறது. இரண்டு மாதங்களில் வந்துவிடும்.” என சொல்லியிருக்கிறார். 

இந்தப் புத்தகம் வந்தால் பல முக்கிய அரசியல் தலைகளின் முகத்திரை கிழியும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...