Asianet News TamilAsianet News Tamil

கொரோனா சிகிச்சைக்காக, 2000 மருத்துவர்கள், 6000 செவிலியர்கள் நியமனம்... அமைச்சர் தகவல்

வடமாநிலங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பரிசுத்தொகைகள் அறிவிக்கப்படும் நிலையில் தமிழகத்தில் அதிகாலையிலேயே தன்னெழுச்சியுடன் தடுப்பூசி போட காத்திருப்பது பெரிய விழிப்புணர்வு என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் மேலும் தெரிவித்தார்.

Appointment of 2000 doctors, 6000 nurses for corona treatment ... Minister Information
Author
Tamil Nadu, First Published Jun 16, 2021, 5:58 PM IST

தமிழ்நாட்டில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கூடுதலாக 2 ஆயிரம் மருத்துவர்களும், 6 ஆயிரம் செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.Appointment of 2000 doctors, 6000 nurses for corona treatment ... Minister Information

கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில், ஆய்வு மேற்கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் தடையின்றி தடுப்பூசிகள் கிடைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டுள் ளதாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு இதுவரை ஒரு கோடியே 16 லட்சத்து 57 ஆயிரத்து 690 தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றதாகவும், இதில், ஒரு கோடியே 6 லட்சத்து 60 ஆயிரத்து 464 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள தாகவும் கூறினார்.

மேலும் கூடுதலாக பத்தே கால் கோடி தடுப்பூசிகள் கிடைத்தால் தமிழகத்தில் தகுதியான அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டுவிடும் என்றும் தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்களிடையே பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றும் தஞ்சையில் அதிகாலையில் இருந்து தடுப்பூசிக்கு டோக்கன் பெற காத்திருப் பதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Appointment of 2000 doctors, 6000 nurses for corona treatment ... Minister Information

வடமாநிலங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பரிசுத்தொகைகள் அறிவிக்கப்படும் நிலையில் தமிழகத்தில் அதிகாலையிலேயே தன்னெழுச்சியுடன் தடுப்பூசி போட காத்திருப்பது பெரிய விழிப்புணர்வு என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் மேலும் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios