பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரைப்போலவே தோற்றம் கொண்ட அபிநந்தன் பதக் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து அசத்தி வருகிறார்.

 

பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது மோடிக்கு ஆதரவாக அவரை போன்றே தோற்றம் கொண்ட அபிநந்தன் பதக் பிரசாரம் செய்தார். இப்போது நடக்கும் தேர்தலில் வாரணாசியில் அபிநந்தன் பதக் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.

வாரணாசி காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை ஆதரித்து ஓட்டுகேட்டு வரும் அவர் பிரச்சாரத்தின் போது மோடி பேசும் அவர், ’’நான் அரசாங்கத்தை வழி நடத்துவதில் தோல்வி அடைந்துவிட்டேன். உண்மையை தான் சொல்கிறேன். எனவே இந்தத்தொகுதியை அஜய்ராயிடம் ஒப்படைக்கிறேன்’ என்று அபிநந்தன் பதக் பேசி கிண்டல் அடிக்கிறார். முன்னதாக வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக களமிறங்க வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். பின்னர் வாபஸ் பெற்று அஜய் ராய்க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.