இன்று மாலைக்குள் அவர் பதவி விலக வேண்டும், இல்லை என்றால் ஆளுநரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போயுள்ளது.
இன்று மாலைக்குள் ஆளுநரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் ஆளுநரின் பாதுகாப்பு நடவடிக்கை ஏன் சரியாக எடுக்கவில்லை என்று விளக்கம் அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுத உள்ளதாக அண்ணாமலை எச்சரித்துள்ளார். தமிழக ஆளுநர் தர்மபுர ஆதீனம் சென்றுள்ள நிலையில் அங்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் ஆளுநரின் கால்வாய் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக வந்துள்ள தகவலை அடுத்து அண்ணாமலை இவ்வாறு எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தது முதல் பாஜக அதை கடுமையாக விமர்சித்து வருகிறது. அதிலும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். ஆனால் இதுவரை தன் குற்றச்சாட்டுகளுக்காக ஆதாரத்தை அவர் வெளியிடவில்லை. அதேநேரத்தில் ஸ்டாலின் முதலமைச்சரானது முதல் புதிய ஆளுநராக ஆர்.என் ரவி மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் ரவியில் நியமனத்தின் போதே திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. பல ஆண்டுகாலமாக உளவுத் துறையில் பணியாற்றியவரும், காவல்துறை அதிகாரியுமான ஆர்.என் ரவியை தமிழகத்திற்கு ஆளுநராக நியமிப்பதன் நோக்கம் என்ன?

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை இடையூறு செய்வதற்காகவே ஆளுநர் ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டுள்ளார் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில்தான் பல்வேறு விவகாரங்களில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கு மன மோதல் நீடித்து வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் இன்னும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறார். இது ஆளுநருக்கு எதிரான விமர்சனத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. இதேபோல் ஒன்பதுக்கும் மேற்பட்ட மாநில அரசின் மசோதாக்களை ஆளுநர் பரிசீலிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். அரசின் கோப்புகளிலும் ஆளுநர் கையொப்பமிடாமல் தேக்கிவைத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில்தான் ஆளுநர் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்கெல்லாம் அவருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனத்திற்கு ஆளுநர் இன்று வருகை தந்துள்ளார். ஆளுநரை ஆதினத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என தருமபுர ஆதீனத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. ஆனால் அவை அனைத்தையும் மீறி ஆளுநர் இன்று தர்மபுர ஆதினம் தினத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அதற்காக அவரது வாகனம் இன்று தர்மபுர ஆதீனத்திற்கு வந்தது. அப்போது அங்கு கருப்பு கொடியுடன் காத்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர். ஆளுநருக்கு எதிராக முழக்கம் எழுப்பியதுடன், அவருக்கு கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநரின் கான்வாய் மீது கற்கல், கொடிகள் வீசியெறிப்பட்டதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நிலையில் இதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மிக கடுமையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழக ஆளுநர் மயிலாடுதுறையில் ஞான யாத்திரை துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் திமுகவை சேர்ந்தவர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், தொண்டர்கள் ஆளுநரின் வாகனம் மீது கல்லெறிந்து, கருப்புக் கொடியை வீசியிருக்கிறார்கள். தமிழக முதல்வர் அவர்களால் ஆளுநருக்கு கூட பாதுகாப்பு வழங்க முடியவில்லை. எனவே முதல்வர் இதற்கு வருத்தம் தெரிவித்த ஆளுனரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இன்று மாலைக்குள் அவர் பதவி விலக வேண்டும், இல்லை என்றால் ஆளுநரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போயுள்ளது. ஆளுநருக்கு கூட பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காதது ஏன் என விளக்கம் அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுத இருக்கிறோம் . இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
