apolo piradap reddy said few thing about jayalalaithaa

அப்போலோ குழுமத்தலைவர் செய்தியாளர்களை சந்தித்து சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜெயலலிதா மரணம் தொடர்பாக தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என அப்போலோ குழுமத்தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார்.மேலும் எங்களால் எந்த அளவிற்கு சிகிச்சை அளிக்க முடியுமோ அந்த அளவிற்கு சிகிச்சை அளித்து விட்டோம் என அப்போலோ குழுமத்தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார்

மேலும், ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்தது வரவேற்பதாகவும், தங்களுடைய முழு ஒத்துழைப்பும் விசாரணையின் போது வழங்கப்படும் என தெரிவித்தார்

பிரதாப் சி ரெட்டியுடன் இருந்த டாக்டர் ஹரிபிரசாத், ஜெயலலிதா மரணத்தில் எதையும் மறைக்கவில்லை எனவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.ஆனால் அமைச்சர்கள் ஜெயலலிதாவை பார்த்தார்களா என்ற கேள்விக்கு மட்டும் பதில் அளிக்க மறுத்துள்ளார் டாக்டர். ஹரிபிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது