மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலன் இல்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக உயிர் இழந்தார்.
 
இவருடைய மரணத்திலோ சந்தேகம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, இதற்காக தனி ஆணையம் அமைத்தது தமிழக அரசு. அதற்காக, ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனி ஆணையம் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்து வருகிறது.

இந்த நிலையில் அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவிற்காக எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்பது குறித்து  விவரம் வெளிவந்து உள்ளது. இது தொடர்பாக ஆறுமுக சாமி ஆணையத்தில் அப்போலோ நிர்வாகம் அளித்துள்ள பதில்....

அதன்படி,
  
ஜெயலலிதாவுக்கு 75 நாளில் உணவுக்காக ரூ. 1.17 கோடி செலவாகியுள்ளது என்றும், ஜெ.மருத்துவ செலவு மொத்தம் ரூ.7 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரூ.6 கோடிக்கான காசோலையை அதிமுக தலைமை வழங்கி உள்ளது.

மேலும் ரூ.41.13 லட்சத்துக்கான காசோலை அப்பல்லோவுக்கு தரப்பட்டு இருக்கிறது.

ரூ.45 லட்சம் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு தரவேண்டி உள்ளது.

ஜெயலலிதாவுக்கு பிசியோதெரப்பி செய்த சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனைக்கு ரூ.1.29 கோடி. இந்த அறிக்கையை அப்போலோ நிர்வாகம் ஆறுமுகசாமி ஆணையத்தில் சமர்ப்பித்து உள்ளது.