தமிழகத்தில் எந்த ஒரு இளைஞரும் ஜாதி இல்லை என மறுத்தால் அவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என்று நடிகர் கமல்ஹாசனின் அதிரடி திட்டத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர் பாரதி கிருஷ்ணகுமார் அறிவித்துள்ளார்.

நடிகர் கமலஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம்  என்ற கட்சியைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து கட்சியை வளர்ப்பதற்கான  பல்வேறு நடவடிக்கைகளை கமல்ஹாசன் மேற்கொண்டு வருகிறார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் நேரடியாக பங்கேற்ற கமல்ஹாசன் இப்பிரச்சனைக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்தார்.

இந்நிலையில் திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்கக்காததற்கு கண்டனம் தெரிவித்து பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்ளைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில் தமிழகத்தில் எந்த ஒரு இளைஞரும் ஜாதி இல்லை என மறுத்தால் அவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை அக்கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர் பாரதி கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.