10 நாள் டெல்லியில் தங்கி இருந்து ஆட்சியை கவிழ்த்தவர் ஜெ. !அதிமுகவில் இணைந்ததும் பாஜகவை எச்சரிக்கும் அன்வர்ராஜா

கொள்கைக்கு ஏதேனும் இடர்பாடு ஏற்படுமானால் உடனடியாக அந்த கூட்டணியில் இருந்து விலகுவதற்கு அண்ணா திமுக தயங்கியதில்லை,  பத்து நாள் டெல்லியில் தங்கி இருந்து அங்கே பாஜக ஆட்சியை கவிழ்த்தவர் ஜெயலலிதா என அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். 

Anwar Raja has said that the AIADMK will not hesitate to withdraw from the BJP alliance if there is any problem with the policy

என் வாழ்வில் ஒரு சிறிய சறுக்கல்

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லோரோடும் ஒத்துப் போகாத ஒருவன் இறந்தவனுக்கு சமமாவான், ஒரு மிகப்பெரிய இயக்கம் அந்த இயக்கத்தை தோற்றுவித்ததில் ராமநாதபுரம் மாவட்டத்தில் என் பங்கு உண்டு.

 எம்ஜிஆர் கட்சி தொடங்கும் பொழுது நான் ஒன்றிய கழகச் செயலாளர், மாவட்ட செயலாளர், அமைப்புச் செயலாளர், சிறுபான்மை அணி செயலாளர், இப்படி எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கபட்டவன் அப்படி இருந்த சூழ்நிலையில் என் வாழ்வில் ஒரு சிறிய சறுக்கல். மீண்டும் இப்போது அதிமுகவில் கட்சியின் பொதுச் செயலாளர் தலைமையில் இணைந்துள்ளேன். கட்சியின் சட்ட திட்டம் என்ன என்று தெரியும் கட்சியின் வளர்ச்சிக்கு நான் பாடுபடுவேன் என தெரிவித்தார். 

Anwar Raja has said that the AIADMK will not hesitate to withdraw from the BJP alliance if there is any problem with the policy

கூட்டணியில் இருந்து விலகுவதற்கு அதிமுக தயங்கியதில்லை

பாஜகவை விமர்சித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒரு கட்சியை விமர்சிப்பது என்பது வேறு கூட்டணி என்பது வேறு, இன்றும் கூட பாஜகவின் தலைவர்கள் அண்ணா திமுகவை விமர்சிக்க தான் செய்கிறார்கள். ஆனால் கூட்டணி என்பதை முடிவு செய்ய வேண்டியது இரு கட்சியின் தலைவர்கள். இதுவரை எல்லா கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள் காங்கிரஸ்சை தவிர. திமுக - பாஜக கூட்டணி பின்னி பிணைந்து இருந்தது., ஆனால் நாங்கள் அப்படியல்ல கொள்கைக்கு ஏதேனும் இடர்பாடு ஏற்படுமானால் உடனடியாக அந்த கூட்டணியில் இருந்து விலகுவதற்கு அண்ணா திமுக தயங்கியதில்லை,  பத்து நாள் டெல்லியில் இருந்து தங்கி அங்கே பாஜக ஆட்சியை கவிழ்த்தவர் ஜெயலலிதா.

Anwar Raja has said that the AIADMK will not hesitate to withdraw from the BJP alliance if there is any problem with the policy

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா.?

கட்சியில் இந்த ஒன்றறை ஆண்டு இல்லாமல் காலம் வருத்தம் அளிக்கவில்லை.  நான் கட்சிக்காரனாகத்தான் இருந்தேன், எல்லா கட்சிகார்களும் என்னுடன் பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்களின் எல்லா விசேஷங்களுக்கும் சென்று கொண்டு தான் இருந்தேன். எந்த முக்கியதுவம் தேவை இல்லை. என்னுடைய பெயர் என்னுடைய தோற்றம் எனது பெயரை அறிமுகப்படுத்திய எம்ஜிஆர் ஜெயலலிதா அவர்கள் கொடுத்ததே மிகப் பெரிய அடையாளம். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அதை கட்சியின் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என அன்வர் ராஜா கூறினார். 

இதையும் படியுங்கள்

சசிகலாவுக்கு ஆதரவாக பேசிய மாஜி அமைச்சர்..! மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்.. கெத்து காட்டும் இபிஎஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios