சசிகலாவுக்கு ஆதரவாக பேசிய மாஜி அமைச்சர்..! மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்.. கெத்து காட்டும் இபிஎஸ்
பாஜக மற்றும் பாமகவிற்கு எதிராக பேசியதாக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெறவுள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் அதிகார போட்டி
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் அதிகார போட்டி ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வந்தனர். இவர்கள் தலைமையில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்தது. ஆனால் 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் அதிமுக மற்றும் பாஜக தோல்வி அடைந்தது. இதனையடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலை எதிர்கொண்டது. அப்போதும் ஆட்சி அதிகாரத்தை அதிமுக இழந்தது.
தேர்தல் தோல்விக்கு யார் காரணம்.?
தேர்தல் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பாஜகவுடன் கூட்டணியை விமர்சித்தார். மேலும் பாமக தலைவர்களின் கருத்திற்கும் ஆவேசமாக பதில் அளித்தார்.மேலும் அதிமுகவின் தோல்விக்கு இரட்டை தலைமை தான் காரணம். ஒற்றை தலைமை அவசியம் என்ற கருத்தை தெரிவித்தார். எனவே ச்சிகலாவை ஒற்றை தலைமையாக கொண்டு வரலாம் எனவும் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவிற்கும் சி.வி.சண்முகத்திற்கும் மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதிமுகவில் மீண்டும் இணைந்த அன்வர் ராஜா
இதனை தொடர்ந்து அதிமுக தொடர்பாக எந்தவித கருத்தும் அன்வர் ராஜா தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். ஓபிஎஸ் அல்லது டிடிவி தினகரன் அணிக்கும் செல்லாமல் இருந்தார். இந்த காலகட்டத்தில் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டு்ம சேர்ந்துக்கொள்ளப்படுவார்கள் என எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்தது. இதனையடுத்து இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு முன்னதாக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவில் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டார்.
இதையும் படியுங்கள்