அரசியல் விஞ்ஞானி செல்லூர் ராஜூக்கெல்லாம் பதில் சொல்லி என்னை தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை-அண்ணாமலை ஆவேசம்
தமிழகத்தில் சில பேர் அரசியல் விஞ்ஞானி என நினைந்து சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என அண்ணாமலை தெரிவித்தார்.
அண்ணாமலை JUST LIKE
தேசிய அளவில் அதிமுக- பாஜக இடையே கூட்டணி நீடித்து வரும் நிலையில், தமிழகத்தில் அவ்வப்போது இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், ஓபிஎஸ் தொடர்ந்து எங்கள் பக்கம் தான் இருக்கிறார் என அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அண்ணாமலைக்கும் எங்களுக்கும் என்ன உள்ளது. அவர் பாஜக மாநில தலைவர் அவர் கட்சியினருக்காக அவர் பேசுகிறார். JUST LIKE.எங்களுக்கு தெரிந்ததெல்லாம் மோடிஜி, நட்டாஜி, அமித்ஷாஜி, எத்தனை நபர்கள் இருந்தாலும் மோடி ஜி அவர்களுக்கு எடப்பாடியாரின் அருமை தெரிகிறது. அதனால் தான் அருகில் அழைத்து நிற்பாட்டினார்.
அரசியல் விஞ்ஞானி செல்லூர் ராஜூ
இங்கிருப்பவருக்கு எடப்பாடி பழனிசாமியின்அருமை தெரியவில்லை என்றால் அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. பாஜகவை வளர்ப்பதற்காக அண்ணாமலை என்னவென்று வேணாலும் பேசலாம் அவர் கொள்கை வேறு எங்களது கொள்கை வேறு. எங்களது அதிமுக மத சார்பற்ற அணி நாங்கள் கோவிலுக்கு செல்வோம் பள்ளிவாசலும் செல்வோம். தேர்தல் வரும்போது எங்களது கூட்டணி வரும் எங்களது கொள்கை வேறு, அவர்களது கொள்கை வேறு என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நாடை பயணத்தில் ஈடுபட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், யார் பேசினால் யாருக்கு பதில் சொல்ல வேண்டும் என தரம் உள்ளது. சில பேர் விஞ்ஞானிகளாக அரசியல் விஞ்ஞானிகளாக தன்னை நினைத்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி என்னுடைய தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை.
தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை
நாங்கள் மக்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். மக்கள் தான் எங்கள் எஜமானர்கள். எந்த தலைவருடைய அங்கீகாரமும் எங்களுக்கு தேவை இல்லை. மக்கள் ஆதரவு வேண்டும். மக்கள் அன்பு வேண்டும். சில பேர் அரசியல் விஞ்ஞானி என நினைந்து சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என தெரிவித்தார். இதனை தொடர்ந்து இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை சிறுபான்மையினர் என்று கூறினால் பொறுத்துக் கொள்ள மாட்டேன்; அவ்வாறு சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன் என சீமான் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்த அவர், சில பேர் தமிழகத்தில் அரசியல் புரிதல் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
யார் மைனாரிட்டி.? யார் மெஜாரிட்டி.?
மணிப்பூர் போனால் இந்துக்கள் மைனாரிட்டி, தமிழகம் வந்தால் இந்துக்கள் மெஜாரிட்டி, சில பேருக்கு இந்தியா என்கிற சிந்தனை இல்லை. மைனாரிட்டி,மெஜாரிட்டி அரசியல் நடத்துகிறார்கள். எல்லாரும் மனிதர்கள் தான், எல்லாரும் சமமானவர்கள் தான். ஆனாலும் மைனாரிட்டி, மெஜாரிட்டி என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. மைனாரிட்டி சொன்னால் யாரும் குறைந்தவர்கள் கிடையாது. மெஜாரிட்டி என சொன்னால் உயர்ந்தவர்கள் இல்லை. இந்து சமுதாயத்தில் மைனாரிட்டி, மெஜாரிட்டி உள்ளது. கிறிஸ்தவ சமுதாயத்தில் மைனாரிட்டி உள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்தில் தனி இடம் உள்ளது. இன்று ஒரு தலைவர் மைனாரிட்டி என கூறக்கூடாது என சொல்கிறார் அப்படியென்றால். அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து நீக்கி விடலாமா.? மைனாரிட்டி இருக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து என் அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
அண்ணாமலை எங்களுக்கு "Just like" அவ்வளவு தான்: சீண்டும் செல்லூர் ராஜு!