Asianet News TamilAsianet News Tamil

அ.ராசாவை அலற வைத்த ஆவேச நிர்வாகிகள் - நீலகிரி தி.மு.க.வில் நெத்தியடி காட்சிகள்

Anti Voice Rise against raja at nilgris
Anti Voice Rise against raja at nilgris
Author
First Published Jun 30, 2017, 9:09 PM IST


 

நீலகிரி தனி தொகுதியாக கடந்த 2009ல் அறிவிக்கப்பட்டபோது பெரம்பலூரில் இருந்து பேர்த்து எடுக்கப்பட்டு அங்கே நடவு செய்யப்பட்டார் .ராசா என்று புகழ்பெற்ற ஆண்டிமுத்து ராசா. காய்ந்த காடான பெரம்பலூர் அரசியலுக்கும், குளிர்மேடான நீலகிரி அரசியலுக்கும் எந்த விதத்திலும் தொடர்பு கிடையாது. மக்களின் வாழ்க்கை முறை, அரசியலை அவர்கள் அணுகும் முறை என்று எல்லாமே தலைகீழ். ஆனால் இதே நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் கீழ் தரைப்பகுதியை சேர்ந்த மூன்று தொகுதிகள் அடங்கியதால் சற்றே தெம்புடன் களமிறங்கினார் ராசா.

Anti Voice Rise against raja at nilgris

மலை மற்றும் தரை மாவட்டங்களின் தி.மு..வினர் தங்களின் ராஜ வேட்பாளரான ராசாவை கொண்டாடினர். எதிரணியில் .தி.மு.. நிற்கவில்லை மாறாக அதன் கூட்டணி வேட்பாளரான .தி.மு..வின் கிருஷ்ணன் நின்றார். ஆனால் ராசாவின் அரசியல் கவர்ச்சியும், தி.மு.. கூட்டணியினரின் எழுச்சி உழைப்பும், ஊட்டி தொகுதியின் காங்கிரஸ் ஆதரவு வாக்குகளும், கூடலூர் தொகுதியின் தாயகம் திரும்பிய தமிழர்களான தலித்களின் வாக்குகளும் ராசாவை ரகளையாக வெற்றி பெற வைத்தன.

முதல் பந்திலேயே தன்னை கோப்பை வெல்ல வைத்த நீலகிரி தொகுதிக்கு முடிந்த  மட்டும் நல்லவை செய்தார் ராசா. அவர் எம்.பி.யாக இருந்த போதுதான் நிலச்சரிவு புரட்டிப்போட்டது நீலகிரியை. மனிதர் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இறங்கி மீட்புப்பணியாற்றினார். வீடிழந்தவர்களுக்கும், பொருள் இழந்தவர்களுக்கும் அள்ளியள்ளி உதவி செய்தார்.

இடையில் 2ஜி வழக்கு அவரை திகாருக்குள் திணித்தது. ஆனாலும் அங்கேயிருந்தபடி கவனிக்கதக்க வகையில் தொகுதிக்கு பணியாற்றினார்.

Anti Voice Rise against raja at nilgris

பிறகு ராசாவும் வெளியே வந்தார், அடுத்த நாடாளுமன்ற தேர்தலும் வந்தது. இந்த முறை நீலகிரியை வென்றே தீருவது எனும் வைராக்கியத்துடன் நேரடியாக களமிறங்கியது அ.தி.மு.க. மீண்டும் ராசாவே தி.மு.க.வின் வேட்பாளரானார்.

2ஜி வழக்கில் உள்ளே சென்று வந்திருந்தாலும் கூட கடந்த 5 ஆண்டுகளில் தான் ஆற்றிய பணியும், கட்சியினரின் உழைப்பும் தன்னை கரைசேர்க்கும் என நம்பினார் ராசா. ஆனால் இந்த முறை ‘ஏன் இந்த மாவட்டத்தை சேர்ந்தவங்க யாருமே எம்.பி.யாகுற தகுதியோட இல்லையா?” என்று அதிருப்தி குரலோடுதான் பிரசாரத்தில் இறங்கினர் தி.மு.க.வினர். ராசா தேர்தலில் தோற்றார்.

சரி இந்த தோல்வியோடு ராசா இங்கிருந்து நகர்ந்துவிடுவார் என்றுதான் நீலகிரி மாவட்ட மற்றும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க.வினர் நினைத்தனர். ஆனால் தனக்கென ஒரு ஆதரவு பட்டாளத்தை ஏற்படுத்திய ராசா இதோ இன்று வரை நீலகிரியில் தனி அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்.

ராசாவின் உளவுப்படை அம்மாவட்ட கழகத்தில் நடக்கும் விஷயங்களை ஒன்று விடாமல் இவருக்கு ஒப்புவிப்பதும், அதை இவர் அப்படியே ஸ்டாலின் காதில் ஓதுவதுமாக காலங்கள் போய்க் கொண்டிருக்கின்றன. இந்த மாவட்ட கழகத்துக்கும் ராசாவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றாலும் ராசா இங்கே கால் வைப்பதை நீலகிரி மாவட்ட செயலாளரான குன்னூர் பாரக்கும், மாஜி அமைச்சர் கம் மாவட்ட செயலாளருமான எடப்பள்ளி ராமச்சந்திரனும் சற்றும் விரும்பவில்லை. ஆனால் ஆ.ராசாவுக்கோ அது பற்றி கவலையேயில்லை.

Anti Voice Rise against raja at nilgris

இந்த நிலையில் தற்போது மீண்டும் அடுத்த தேர்தலிலும் நீலகிரியிலேயே போட்டியிடும் ஆசை ராசாவுக்கு துளிர்த்திருக்கிறதாம். இதனால் இந்த முறை நின்றால் தனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? என்பது குறித்து ஒரு சர்வே எடுத்துத் தர நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தனது ஆதரவுப்பட்டாளத்திடம் சொன்னாராம்.

ராசாவின் ஆதரவாளர்களின் எண்ணிக்கை வெகு சொற்பம். எனவே மற்ற தி.மு.க.வினரையும் இணைத்து செயல்பட்டால்தான் சர்வே சிறப்பாக முடியும் என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள். எனவே அவர்களில் சில முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஊட்டியில் ஒரு வில்லாவில் கறி விருந்துடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடந்திருக்கிறது.

உணவு முடிந்ததும் ராசாவின் ஆதரவாளர் ”அண்ணன் ராசாவுக்காக நாம ஒரு சர்வே நடத்தி ஜமாய்க்க போறோம். அதை எப்படி நடத்தணும் தெரியுமா?...” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ராசாவின் ஆதரவில்லாத தி.மு.க.நிர்வாகிகள் சிலர் எழுந்து “அவருக்கும் இந்த மாவட்டத்துக்கும் என்னய்யா சம்பந்தம்? ஏதோ ஒரு தடவை தலைமை நிறுத்துச்சு, ஜெயிக்க வெச்சோம். தொடர்ந்து அவரேதான் நிக்கணுமா. அதான் போன டைம் தோத்துட்டார்ல, அப்படியே கிளம்ப சொல்லுங்க. நாங்களும் கட்சிக்கு பாடுபடுறவங்கதான், எங்களுக்கும் எம்.பி.யாகுற ஆசையும், தகுதியும் இருக்குது.

Anti Voice Rise against raja at nilgris

இதையெல்லாம் தாண்டி 2ஜி கேஸ்ல தீர்ப்பு வரப்போகுது. அதுல அவரு திகாருக்கு போகப்போறாரா அல்லது வெளியிலதான் இருப்பாரன்னு தெரியலை. இந்த லட்சணத்துல சர்வே எடுக்க வந்துட்டீங்களா?” என்று எகிறியிருக்கிறார்கள்.

இதை சற்றும் எதிர்பாராத ராசாவின் ஆட்கள் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் பப்பு வேகவில்லை. இது அப்படியே ராசாவின் காதுகளுக்கு பாஸ் ஆக ’காலம் இருக்குது பார்த்துக்கலாம், விடுங்க.” என்று அவர்களை தேற்றிவிட்டாலும் கூட உள்ளூர மிகவும் அலறிப்போய் இருக்கிறாராம்.

சோதனை மேல் சோதனை போதுமாய்யா ராசா?

 

Follow Us:
Download App:
  • android
  • ios