அதிமுக மாஜிக்களுக்கு செக்.!முன்னாள் எம்எல்ஏ பிரபு வீட்டில் நுழைந்த லஞ்ச ஒழிப்பு துறை-திடீர் சோதனையால் பரபரப்பு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று சோதனை நடத்திய நிலையில், இன்று கள்ளக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Anti corruption police raid former MLA Prabhu house KAK

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் வீட்டில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொள்வத் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் கள்ளக்குறிச்சி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வானவர் பிரபு, இவர் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக டிடிவி அணிக்கு சென்றார். இதனையடுத்து சிறிது காலத்தில் மீண்டும் அதிமுகவிற்கு திரும்பினார். இந்தநிலையில் கள்ளக்குறிச்சி தியாகதுருவத்தில் உள்ள பிரபுவின் வீடு, பால் பண்ணை, தந்தை வீடு மற்றும் அவரது அலுவலகங்கள் உள்ளிட்ட 9 இடங்களில்  லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

முன்னாள் எம்எல்ஏக்களுக்கு செக்

அதிமுக ஆட்சி காலத்தில் எம்எல்ஏவாக இருந்த போது வருமானத்தை மீறி அதிகளவு சொத்து சேர்த்ததாக புகார் வந்ததையடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனையின் முடிவில் தான் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சொத்துக்களின் மதிப்பு தெரியவரும். இதே போல நேற்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வத்தின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். சுமார் 15 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் 15 கோடி மதிப்பிலான 47 ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியானது. 

இதையும் படியுங்கள்

15 மணிநேரம் சோதனை! வசமாக சிக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ! ரூ.15 கோடி மதிப்பிலான 47 ஆவணங்கள் சிக்கியது!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios