திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் சிலர் விரைவில் பாஜவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முதல்வர் மம்தா பானர்ஜி அதிர்ச்சியடைந்துள்ளார். 

மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பனார்ஜி முதல்வராக உள்ளார். மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 42 மக்களவை தொகுதிகளில் 22 தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் 18 தொகுதியில் பா.ஜ.க-வும் வெற்றி பெற்றிருக்கிறது. இது, ஆளுங்கட்சிக்கு எதிரான அலையாகவே பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான சில தினங்களிலேயே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து 2 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 56 கவுன்சிலர்கள் பா.ஜ.க-வில் இணைந்துள்ளனர். டெல்லியில் நடந்த விழாவில் இந்த இணைப்பு நடைபெற்றது. இவர்களுடன் இடதுசாரி எம்.எல்.ஏ ஒருவரும் பா.ஜ.க-வில் இணைந்துள்ளார். இது பா.ஜ.க- திரிணாமுல் காங்கிரஸ் இடையே நடக்கும் அரசியல் யுத்தத்தில் மம்தாவுக்கு மேலும் ஒரு பின்னடைவாக கருதப்பட்டது. 

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 6 எம்.எல்.ஏ., விரைவில் பாஜகவில் இணை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் அணி மாறுவதால் மம்தாவின் முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் இருந்து வருகிறார்.